இந்தியாவிலும் மடகாசுகரிலும் காணப்படும் தொன்மாக்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியாவிலும் மடகாசுகரிலும் காணப்படும் தொன்மாக்களின் பட்டியல் (List of Indian and Madagascan dinosaurs) என்பது இந்தியத் துணைக்கண்டம் அல்லது மடகாசுகரிலிருந்து மீட்கப்பட்ட தொன்மாக்களின் பட்டியல்ஆகும். இன்று புவியியல் ரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்தியத் துணைக்கண்டமும் மடகாசுகரும் மீசோசூயிக் முழுவதிலும் இணைந்து காணப்பட்டது. இதனால் இவ்விரு பகுதிகளும் தொன்மா விலங்கினங்களைப் பகிர்ந்து கொண்டன. இங்கு காணப்படும் தொன்மாக்கள் நவீன ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நிலப்பரப்புகளில் காணப்பட்ட பிற தொன்மாக்களிலிருந்து வேறுபட்டது.
இந்திய தொன்மாக்களின் புதைபடிவ பதிவு முழுமையாக மீசோசோயிக் காலத்திலிருந்து கிடைக்கும் புதைபடிவங்கள் ஆகும். இவை திரையோசிக் காலத்திலில் தொடங்கி (251.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 201.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்த புவியியல் காலம்), ஜுராசிக் காலம் வரை (201 மில்லியன் ஆண்டுகள்) முன்பு 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை) மற்றும் கிரெட்டேசியசு காலம் (145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை), உலகளவில் அனைத்து பறவை அல்லாத தொன்மாக்களும், 65 சதவீத உயிர்களும் அழிந்துவிட்டன.[1] மடகாசுகரில் ஜூராசிக் மற்றும் கிரெட்டேசியசிலிருந்து பல்வேறு தனித்துவமான தொன்மாக்களையும் பாதுகாக்கிறது.