இயந்திரம்
From Wikipedia, the free encyclopedia
இயந்திரம் (ஒலிப்புⓘ) (Machine) அல்லது எந்திரம் என்பது ஆற்றலைப் பயன்படுத்திப் பயனுள்ள வேலையைச் செய்கின்ற அல்லது செய்ய உதவுகின்ற ஒன்றோ அல்லது அதற்கும் மேற்பட்ட இயங்கும் உள்ளுறுப்புகள் கொண்ட கருவியையே குறிக்கின்றது. எந்திரம் வேதி, வெப்ப. மின் ஆற்றல் வடிவங்களைப் பயன்படுத்துகிறது. வரலாற்றியலாக, எந்திரம் என அழைக்கப்பட இயங்கும் உறுப்புகள் அமைதல் வேண்டும். என்றாலும், மின்னனியல் வளர்ச்சிக்குப் பிறகு, இயங்கு உறுப்புகளற்ற எந்திரங்கள் நடைமுறையில் வந்துவிட்டன.[1]
பொதுவாக, வெப்ப ஆற்றலையோ அல்லது ஏதேனும் ஓர் ஆற்றலையோ இயங்கு ஆற்றலாக மாற்றும் கருவி பொறி (Engine) அல்லது ஓடி (motor) அல்லது இயக்கி என்று அழைக்கப்படுகிறது.
தனி எந்திரம் என்பது விசையின் திசையையோ பருமையையோ (அளவையோ) மாற்றும். ஆனால், ஊர்திகள், மின்னனியல் அமைப்புகள், மூலக்கூற்று எந்திரங்கள், கணினிகள், வானொலிகள், தொலைக்காட்சி எனும் காணொலிகள் போன்ற சிக்கலான பலவகை எந்திரங்களும் பல்கிப் பெருகிவிட்டன.