![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ec/Iron%2528III%2529_chloride_hexahydrate.jpg/640px-Iron%2528III%2529_chloride_hexahydrate.jpg&w=640&q=50)
இரும்பு(III) குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
இரும்பு(III) குளோரைடு (Iron(III) chloride) என்பது FeCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரிக் குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கிறார்கள். இரும்பு +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் இச்சேர்மம் தொழில்துறை அளவில் பயன்பாடு கொண்ட ஒரு பயன்படு பொருளாக விளங்குகிறது. இரும்பு(III) குளோரைடு படிகங்களின் நிறம் பார்வைக் கோணத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. எதிரொளிக்கப்பட்ட ஒளியில் இப்படிகங்கள் அடர் பச்சை நிறத்திலும், ஊடுறுவி வெளியேறும் ஒளியில் இப்படிகங்கள் செவ்வூதா நிறத்திலும் காட்சியளிக்கின்றன. இரும்பு(III) குளோரைடின் நீரிலி வடிவம் நீருறிஞ்சியாகவும் ஈரக்காற்றில் நீரேற்ற ஐதரன் குளோரைடு மூடுபனியாகவும் உருவாகிறது. மாலிசைட்டு என்ற கனிமமாக இச்சேர்மம், அரிதாக அதன் இயற்கைத் தோற்றத்தில் காணப்படுகிறது. குறிப்பாக சில கிரக மேலோடுகளின் ஆவித்துளைகளிலிருந்து கிடைப்பதாக அறியப்படுகிறது.
![]() இரும்பு(III) குளோரைடு (நீரேற்று) | |||
![]() இரும்பு(III) குளோரைடு (நீரிலி) | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
இரும்பு(III) குளோரைடு இரும்பு டிரைகுளோரைடு | |||
வேறு பெயர்கள்
| |||
இனங்காட்டிகள் | |||
7705-08-0 ![]() 10025-77-1 (அறுநீரேற்று) ![]() | |||
ChEBI | CHEBI:30808 ![]() | ||
ChemSpider | 22792 ![]() | ||
EC number | 231-729-4 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 24380 | ||
வே.ந.வி.ப எண் | LJ9100000 | ||
| |||
UNII | U38V3ZVV3V ![]() 0I2XIN602U (அறுநீரேற்று) ![]() | ||
UN number |
| ||
பண்புகள் | |||
FeCl3 | |||
வாய்ப்பாட்டு எடை |
| ||
தோற்றம் | எதிரொளிக்கும் ஒளியில் அடர் பச்சை; ஊடுறுவும் ஒளியில் ஊதா சிவப்பு | ||
மணம் | ஐதரோ குளோரிம் அமில நெடி]] | ||
அடர்த்தி |
| ||
உருகுநிலை | 307.6 °C (585.7 °F; 580.8 K) (நீரிலி) 37 °C (99 °F; 310 K) (அறுநீரேற்று)[1] | ||
கொதிநிலை |
| ||
912 கிராம்/லிட்டர் (anh. அல்லது அறுநீரேற்று, 25 °C)[1] | |||
-இல் கரைதிறன் |
| ||
+13,450•10−6 செ.மீ3/மோல்[2] | |||
பிசுக்குமை | 12 cP (40% கரைசல்) | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | அறுகோணம், hR24 | ||
புறவெளித் தொகுதி | R3, No. 148 | ||
Lattice constant | a = 0.6065 நானோமீட்டர், b = 0.6065 நானோமீட்டர், c = 1.742 நானோமீட்டர் | ||
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்கோணம் | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் |
| ||
ஏனைய நேர் மின்அயனிகள் |
| ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
இரும்பு(III) குளோரைடு நீரில் கரையும்போது நீராற்பகுப்பு அடைந்து வெப்ப உமிழ் வினையாக வெப்பத்தை வெளிவிடுகிறது. இதன் விளைவாக எஞ்சும் பழுப்புநிற அமிலத்தன்மையும் அரிக்கும் பண்பும் கொண்ட கரைசல் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் குடிநீர் உற்பத்தியில் ஒரு துகள் திரளாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அச்சிடப்பட்ட தாமிரத்தள சுற்றுப் பலகைகளில் நிறமூன்றும் வேதிப்பொருளாகப் பயன்படுகிறது. நீரிலி இரும்பு(III) குளோரைடு மிகவும் வமிமையான ஒரு இலூயிசு அமிலமாகும், கரிமத் தொகுப்பு வினைகளில் வினையூக்கியாக இதைப் பயன்படுத்துகிறார்கள்.