இரெக்மான் தேரி
பாக்கித்தானிள்ள சிந்துவெளி நாகரிகத்துக்கு முந்தைய தொல்லியல் தளம் / From Wikipedia, the free encyclopedia
இரெக்மான் தேரி ( Rehman Dheri ) அல்லது சில சமயங்களில் இரக்மான் தேரி ( Rahman Dheri ) எனவும் அறியப்படும் இது பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தேரா இசுமாயில் கான் அருகே அமைந்துள்ள சிந்துவெளி நாகரிகத்துக்கு முந்தைய தொல்லியல் தளமாகும். தெற்கு ஆசியாவில் இன்றுவரை காணப்படும் பழமையான நகரமயமாக்கப்பட்ட மையங்களில் இதுவும் ஒன்று.[1] கி.மு. 3300 - 1900 தேதியிட்ட இந்தத் தளம் தேரா இசுமாயில் கானுக்கு வடக்கே 22 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது பாக்கித்தானில் எதிர்கால உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் உள்ளது.[2] மேலும், பாக்கித்தானின் கும்லாவின் தளம் அருகில் அமைந்துள்ளது. இராமாயணத்தில் கோமல் ஆற்றை கோமதி ஆறு என்றும், அயோத்தியை ராம் தேரி (இரெக்மான் தேரி என மறுபெயரிடப்பட்டது) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் இரெக்மான் தேரி رحمان ڈھیری, இருப்பிடம் ...
இரெக்மான் தேரி رحمان ڈھیری | |
---|---|
இருப்பிடம் | பாக்கித்தான் |
பகுதி | கைபர் பக்துன்வா மாகாணம் |
ஆயத்தொலைகள் | 31.945870°N 70.885090°E / 31.945870; 70.885090 |
மூடு