இலங்கையின் மாவட்டங்கள்
இலங்கையில் உள்ள நிர்வாகப் பிரிவு / From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் மாவட்டங்கள் (disticts) என்பவை இரண்டாம்-தர நிருவாக அலகுகளாகும். இவை மாகாணங்களுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும். இலங்கையின் 9 மாகாணங்களில் 25 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.[1] ஒவ்வொரு மாவட்டமும் நடுவண் அரசினால் நியமிக்கப்படும்[2] மாவட்டச் செயலாளர் என அழைக்கப்படும் இலங்கை நிர்வாகச் சேவை அதிகாரியின் கீழ் நிருவகிக்கப்படுகிறது.[3] நடுவண் அரசு மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை ஒருங்கிணைபதே மாவட்டச் செயலாளரின் முக்கிய பணியாகும். மாவட்ட ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது, மாவட்டத்துக்குக் கீழுள்ள சிறிய நிருவாக அலகுக்கு உதவிகள் வழங்குவது போன்றவையும் மாவட்ட செயலாளரின் பணிகளாகும்.[4] அத்துடன் வருவாய் சேகரிப்பு, மாவட்டங்களில் தேர்தல்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளும் முக்கியமானவையாகும்.[5]
இலங்கையின் மாவட்டம் District | |
---|---|
வகை | இரண்டாம் நிலை நிருவாக அலகு |
அமைவிடம் | இலங்கை |
எண்ணிக்கை | 25 (as of பெப்ரவரி 1984) |
மக்கள்தொகை | 92,238–2,324,349 |
பரப்புகள் | 699–7,179 கிமீ² |
அரசு | மாவட்டச் செயலாளர் |
உட்பிரிவுகள் | பிரதேச செயலகம் |
மாவட்டம் ஒவ்வொன்றும் பல பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 256 பிரதேச செயலகங்கள் உள்ளன.[1] பிரதேச செயலகங்கள் மேலும் கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[6]