இஸ்பார்டா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
இஸ்பார்டா மாகாணம் (Isparta Province, (துருக்கியம்: Isparta ili) என்பது தென்மேற்கு துருக்கியில் உள்ள மாகாணம் ஆகும். இது வடமேற்கில் அபியோன்கராஹிசர், தென்மேற்கில் பர்தூர், தெற்கில் அந்தால்யா, கிழக்கில் கொன்யா ஆகிய மாகாணங்களை எல்லையாக கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 8,993 கி.மீ2 ஆகும். மக்கள் தொகை 448,298 ஆகும். இதன் மக்கள் தொகை 1990 இல் 434,771 என்றிருந்து அதிகரித்துள்ளது. மாகாண தலைநகரம் இஸ்பார்டா ஆக்கும்.
விரைவான உண்மைகள் இஸ்பார்டா மாகாணம் Isparta ili, நாடு ...
இஸ்பார்டா மாகாணம்
Isparta ili | |
---|---|
துருக்கியில் இஸ்பார்டா மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பகுதி | மத்திய தரைக்கடல் |
துணைப் பகுதி | அந்தல்யா |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | இஸ்பார்டா |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,993 km2 (3,472 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 4,41,412 |
• அடர்த்தி | 49/km2 (130/sq mi) |
Area code | 0246 |
வாகனப் பதிவு | 32 |
மூடு
ஆப்பிள், புளிப்பு செர்ரி, திராட்சை, ரோஜாக்கள் , ரோஜா பொருட்கள், தரைவிரிப்புகளுக்கு இந்த மாகாணம் நன்கு அறியப்படுகிறது. உலுபோர்லு என்ற பகுதியில் நல்ல வளமான நிலங்கள் உள்ளன. இந்த மாகாணம் துருக்கியின் மத்திய தரைக்கடல் பிராந்தியத்தின் குல்லர் பால்கேசி (ஏரிகள் பகுதி) இல் அமைந்துள்ளது மற்றும் பல நன்னீர் ஏரிகளைக் கொண்டுள்ளது.