ஈரான்
From Wikipedia, the free encyclopedia
ஈரான் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஈரான் இசுலாமியக் குடியரசு மேற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவை இதன் அண்டை நாடுகளில் சில. இதன் தலைநகரம் தெஹ்ரான். இந்நாடு பண்டைக்காலத்தில் பாரசீகம் (பெர்சியா) என்று அழைக்கப்பட்டது. "ஈரான்" என்னும் சொல் பாரசீக மொழியில் "ஆரியரின் நிலம்" எனப் பொருள்படும். சசானியக் காலத்தில் இருந்தே உள்நாட்டில் புழக்கத்தில் இருந்த இப்பெயர், 1935 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலக அளவில் பயன்பாட்டுக்கு வந்தது.
விரைவான உண்மைகள் ஈரான் இஸ்லாமியக் குடியரசுجمهوری اسلامی ايران ஜொம்ஹூரி-யெ இஸ்லாமி-யெ ஈரான், தலைநகரம் ...
ஈரான் இஸ்லாமியக் குடியரசு جمهوری اسلامی ايران ஜொம்ஹூரி-யெ இஸ்லாமி-யெ ஈரான் | |
---|---|
குறிக்கோள்: Esteqlāl, āzādī, jomhūrī-ye eslāmī 1 வார்ப்புரு:Fa icon "விடுதலை, சுதந்திரம், இஸ்லாமியக் குடியரசு" | |
நாட்டுப்பண்: சொருத்-எ மெல்லி-எ ஈரான் ² | |
தலைநகரம் | தேரான் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | பாரசீக மொழி |
மக்கள் | ஈரானியர் |
அரசாங்கம் | இஸ்லாமியக் குடியரசு |
• பேரதிபர் | அயத்தொல்லாஹ் அலி கமெய்னி |
• குடியரசுத் தலைவர் | மஹ்மூத் அஹ்மதிநெஜாத் |
ஒன்றியம்[1] | |
• மெதிய அரசு | கிமு 625 [1] |
• சஃபவித் பேரரசு | மே 1502 |
• இஸ்லாமியக் குடியரசு | ஏப்ரல் 1, 1979 |
பரப்பு | |
• மொத்தம் | 1,648,195 km2 (636,372 sq mi) (18வது) |
• நீர் (%) | 0.7 |
மக்கள் தொகை | |
• 2013 கணக்கெடுப்பு | 77,176,930[2] (17வது) |
• அடர்த்தி | 42/km2 (108.8/sq mi) (163வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2014 மதிப்பீடு |
• மொத்தம் | $974.406 billion[3] (17வது[4]) |
• தலைவிகிதம் | $12,478[3] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2014 மதிப்பீடு |
• மொத்தம் | $405.540 billion[3] (29வது) |
• தலைவிகிதம் | $5,193[3] |
ஜினி (2013) | 37.4[5] மத்திமம் |
மமேசு (2014) | 0.766[6] உயர் · 69th |
நாணயம் | ஈரானிய ரியால் (ريال) (IRR) |
நேர வலயம் | ஒ.அ.நே+3:30 (IRST) |
ஒ.அ.நே+4:30 (ஈரான் பகலொளி சேமிப்பு நேரம் (IRDT)) | |
அழைப்புக்குறி | 98 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | IR |
இணையக் குறி | .ir |
|
மூடு
ஈரானில், பாரசீக, அஜர்பைஜான், குர்து (குர்திஸ்தான்) மற்றும் கிலாக்கில் முக்கிய இன குழுக்கள் உள்ளன.