உத்தரகாசி மாவட்டம்
உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
உத்தராகாசி மாவட்டம் (ஆங்கிலம்: Uttarkashi District) வட இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகர் உத்தராகாசி ஆகும். இது இமயமலைப் பகுதியின் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகள் இங்கு உற்பத்தியாகிறது. இந்நதிகள் இந்து மக்களின் சமய வழிபாட்டுத் தலமாக உள்ளன. இம்மாவட்டத்தில் எல்லைகளாக இமாச்சலப் பிரதேசம், திபெத், சமோலி மாவட்டம், ருத்ரபிரயாக் மாவட்டம், டெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் டேராடூன் மாவட்டம் போன்றவை அமைந்துள்ளன.
விரைவான உண்மைகள் உத்தராகாசி மாவட்டம், Country ...
உத்தராகாசி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
Country | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
தலைமையகம் | உத்தராகாசி |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,016 km2 (3,095 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 3,29,686 |
• அடர்த்தி | 41/km2 (110/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
இணையதளம் | uttarkashi |
மூடு