உருசிய மாநில நூலகம்
From Wikipedia, the free encyclopedia
உருசிய மாநில நூலகம் (Russian State Library) என்பது உருசியாவில் உள்ள ஒரு தேசிய நூலகம். இது ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் அமைந்துள்ளது. இந்நூலகம் நூல்களின் தொகுப்பின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நூலகம் என்ற பெருமைக்குறியது. இங்கு சுமார் 17.5 மில்லியன்கள்[2] நூல்களின் தொகுப்புகள் உள்ளது. இந்நூலகத்திற்கு 1925 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் விளாதிமிர் லெனின் மாநில நூலகம் என்று பெயரிடப்பட்டது. மேலும் இந்தப் பெயர், 1992 ஆண்டில் ரஷ்ய மாநில் நூலகம் என்று பெயர் மாற்றம் செய்யும் வரையில் அழைக்கப்பட்டது.
உருசிய மாநில நூலகம் | |
---|---|
நூலகத்தின் முக்கிய கட்டிடம், (
தஸ்தயெவ்ஸ்கியின் நினைவிடத்திற்கு முன்புறம்) | |
தொடக்கம் | 1862 (162 ஆண்டுகளுக்கு முன்னர்) (1862)[1] |
அமைவிடம் | மாஸ்கோ, ரஷ்ய |
கிளைகள் | 3 |
Collection | |
அளவு | 44,800,000 (2012) |
Access and use | |
Population served | 93,100 (2012) |
ஏனைய தகவல்கள் | |
நிதிநிலை | ussian ruble 1,740,000,000 (2012) |
இயக்குநர் | முதல் அலெக்ஸான்டர். விஸ்லே (பொது இயக்குனர்), முதல் விளாடிமிர். Gnezdilov (Executive Director), Viktor V. Fiodorov (President) [1] |
பணியாளர்கள் | 1830 (2012) |
இணையதளம் | http://www.rsl.ru/en |
Map | |
இந்த நூலகத்தில் 275 கிமீ நீலம் உள்ள அலமாரிகளில் 43 மில்லியன்[1] பொருட்களின் தொகுப்புகள் உள்ளது. அவற்றுள் 17 மில்லியன் புத்தகங்கள் உட்பட மற்றும் 13 மில்லியன் பத்திரிகைகள், 350 ஆயிரம் இசை பதிவுகள் மற்றும் ஒலிப்பதிவுகள், 150,000 வரைபடங்கள் மற்றும் பல அடங்கியுள்ளன. உலகில் உள்ள 247 மொழிகளின் நூல்கள் இங்கு சேகரித்து வைக்கப் பட்டுள்ளது. நூலகத்தில் உள்ள மொத்த சேகரிப்புகளில், வெளிநாட்டு தொகுப்புகளின் பங்களிப்பு 29 சதவீதமாக உள்ளது.
சோவியத் ஒன்றியத்தில் 1922 ஆண்டு முதல் 1991 ஆண்டு வரையில் ரஷ்யாவில் வெளியிடப்பட்ட ஒவ்வொரு புத்தகம், நூலகத்தில் வைப்பு செய்யப்பட்டது. இன்றும் இந்த நடைமுறை தொடர்கிறது. மேலும் இந்நூலகம் சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வ வைப்பு நூலகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.