உலக இரட்சகர் சபை
From Wikipedia, the free encyclopedia
உலக இரட்சகர் சபை (Congregation of the Most Holy Redeemer - C.Ss.R) என்பது கத்தோலிக்க திருச்சபையில் உள்ள ஒரு துறவற சபையாகும்[1]. இது புனித அல்போன்சு லிகோரி (1696-1787)[2] என்பவரால் இத்தாலி நாட்டில் நேபுள்சு நகர்ப்புறத்தில் வாழ்ந்த ஏழை மக்களுக்கு பணி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் உருவாக்கம், வகை ...
உருவாக்கம் | 9 நவம்பர் 1732 |
---|---|
வகை | மத நிறுவனம் |
தலைமையகம் | ரோம், இத்தாலி |
முக்கிய நபர்கள் | புனித அல்போன்ஸ் மரிய லிகோரி — நிறுவனர் |
வலைத்தளம் | www.cssr.com |
மூடு
உலக இரட்சகர் சபைத் துறவியருள் குருக்களும் அருட்சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் தற்போது 77க்கும் அதிகமான நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.