![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Raising_the_Flag_on_Iwo_Jima%252C_by_Joe_Rosenthal.jpg/640px-Raising_the_Flag_on_Iwo_Jima%252C_by_Joe_Rosenthal.jpg&w=640&q=50)
எரிமலை மற்றும் ரியுகுயு தீவுகளுக்கான போர்
From Wikipedia, the free encyclopedia
எரிமலை மற்றும் ரியுகுயு தீவுகளுக்கான போர் (Volcano and Ryukyu Islands campaign) எனபது இரண்டாம் உலகப் போரில் பசிபிக் போரின் ஓர் அங்கமாக நேசப் படைகளுக்கும் யப்பானியப் பேரரசுப் படைகளுக்குமிடையே பசிபிக் பெருங்கடலில் 1945 ஜனவரி முதல் யூன் வரையான காலப்பகுதியில் நடைபெற்ற சண்டைகள், முறியடிப்புச் சமர்கள் என்பவற்றைக் குறிக்கும்.
எரிமலை மற்றும் ரியுகுயு தீவுகளுக்கான போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
2ஆம் உலகப்போர் பசிபிக் போரின் பகுதி | |||||||
![]() இவோ ஜீமா சண்டையின் போது சுறாபாச்சி மலைமீது அமெரிக்க கொடியேற்றம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() | ![]() |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
![]() ![]() ![]() ![]() ![]() ![]() | ![]() ![]() ![]() |
||||||
இழப்புகள் | |||||||
19,840 கொலை அல்லது காணவில்லை, 58,105 காயம் | 90,400 கொலை அல்லது காணவில்லை, 17,000 காயம், 7671 கைது |
இப் போர் எரிமலை மற்றும் ரியுகுயு தீவுக் கூட்டத்தில் நடைபெற்றது. இப்போரின் முக்கிய சண்டைகளாக இவோ ஜீமா சண்டை (பெப்ரவரி 16-மார்ச் 26, 1945) ஒகினவா சண்டை (ஏப்ரல் 1-ஜூன் 21, 1945) என்பவற்றையும் முக்கிய கடற் சமராக தென்கோ நடவடிக்கையையும் குறிப்பிடலாம்.
இப்போரானது நெசப்படைகளின் யப்பான் அக்கிரமிப்புச் சமரின் ஒரு பகுதியாகும். ஆக்கிரமிப்புக்குத் தேவையான பின்னணித் தளங்களாக இவற்றை பயன்படுத்துவதும் யப்பானின் கப்பல் போக்குவரத்துகளை தடை செய்வதும் இதன் நோக்கமாக இருந்தன. இரோசிமா நாகசாகி நகரங்கள் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல், இரசியா யப்பான் மீது போர் அறிவிப்பு போன்ற நிகழ்வுகள், யப்பான் சரணடைந்தமை, இரண்டாம் உலப்போர் முடிவுற்றமை ஆக்கிரமிப்பு நடைபெறவில்லை.