எல் காஸ்ட்டீயோ பிரமிட்
From Wikipedia, the free encyclopedia
எல் காஸ்ட்டிலோ பிரமிட் என்பது மெக்சிக்கோவின் மாநிலமான யுகட்டானிலுள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெசோஅமெரிக்க படிக்கட்டுப் பிரமிட் ஆகும். எல் காஸ்ட்டிலோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் ஸ்பானிய மொழிச் சொல்லாகும்.
விரைவான உண்மைகள் எல் காஸ்ட்டீயோ பிரமிட், பழங்காலப் பெயர் ...
மூடு
9 ஆம் நூற்றாண்டளவில், மாயன் நாகரீக மக்களால் கட்டப்பட்ட இது குகுல்கன் (குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பதற்கான மாயன் மொழிச் சொல்) கடவுளுக்கான கோயிலாகப் பயன்பட்டது.