எஸ்கிசெஹிர் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
எஸ்கிசெஹிர் மாகாணம் (Eskişehir Province, துருக்கியம்: Eskişehir ili ) என்பது வடமேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இதன் அருகிலுள்ள மாகாணங்கள் வடமேற்கில் பிலெசிக், மேற்கில் கெட்டஹ்யா, தென்மேற்கில் அபியோன்கராஹிசர், தெற்கே கொன்யா, கிழக்கில் அங்காரா, வ்டக்கே போலு ஆகியவை ஆகும். மாகாண தலைநகராக எஸ்கிசெஹிர் உள்ளது. மாகாணத்தின் பெரும்பகுதி மத்திய அனடோலியா பிராந்தியத்தில் அமைந்துள்ளது.
எஸ்கிசெஹிர் மாகாணம்
Eskişehir ili | |
---|---|
துருக்கியில் எஸ்கிசெஹிர் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பகுதி | மத்திய அனடோலியா |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | எஸ்கிசெஹிர் |
• ஆளுநர் | இரோல் ஐயல்டியஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 13,652 km2 (5,271 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 8,71,187 |
• அடர்த்தி | 64/km2 (170/sq mi) |
• நகர்ப்புறம் | 7,34,837 |
Area code | 0222 |
வாகனப் பதிவு | 26 |
எஸ்கிசெஹிர் மாகாணமானது பழமையானதும், கலாச்சார ரீதியாக வளர்ந்த ஒரு துருக்கி மாகாணமாகும். இதன் மக்கள் தொகை 844,842 ஆகும். இதன் நகர்ப்புற மக்கள் தொகை 734,837. எஸ்கிஹெஹிர் இரு பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ளது, எஸ்கிசெஹிர் ஒஸ்மங்காசி பல்கலைக்கழகம், மற்றும் அனடோலு பல்கலைக்கழகம், இது துருக்கியின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாகும், இது ஐரோப்பாவில் சில கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.