எஸ்ரா பவுண்ட்
From Wikipedia, the free encyclopedia
எஸ்ரா வெஸ்டன் லூமிஸ் பவுண்ட் (Ezra Weston Loomis Pound, 30 அக்டோபர் 1885 - 1 நவம்பர் 1972) என்பவர் ஒரு புலம்பெயர் அமெரிக்க கவிஞரும், திறனாய்வாளரும் ஆவார். நவீனக் கவிதை இயக்கத்தின் துவக்கக்கால முக்கிய நபராகவும், பாசிச அனுதாபியாகவும் இருந்தார்.[1] இவரது படைப்புகளில் ரிப்போஸ்டஸ் (1912), ஹக் செல்வின் மௌபர்லி (1920) மற்றும் முடிக்கப்படாத 120-பிரிவு காவியமான, தி கான்டோஸ் (1917-1969) ஆகியவை அடங்கும்.