எஸ். எம். எஸ் எம்டன் (1906)
From Wikipedia, the free encyclopedia
எஸ்.எம்.எஸ் எம்டன் என்பது செருமானியக் கடற்படையின் ஒரு கப்பல் ஆகும். 1908ம் ஆண்டில் "டான்ஜிக்"(தற்போது கதான்ஸ்க்) என்ற கப்பல் கட்டும் துறையில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு விசித்திரப் போர்க் கப்பல் ஆகும். இது 6,38 மில். ரைச்மார்க்ஸ் செலவில் கட்டப்பட்டது.
1910 இல் எம்டன் | |
கப்பல் (செருமானியப் பேரரசு) | |
---|---|
பெயர்: | எம்டன் |
நினைவாகப் பெயரிடப்பட்டது: | எம்டன் நகரம் |
கட்டியோர்: | கைசர்லிக் வேர்ஃப்ட், டான்ஜிக் |
துவக்கம்: | ஏப்ரல் 06, 1906 |
வெளியீடு: | மே 26, 1908 |
பணியமர்த்தம்: | ஜூலை 10, 1909 |
விதி: | எச்.எம்.ஏ.எஸ். சிட்னி ஆல் முடக்கப்பட்டது மற்றும் கொக்கோசு தீவுகள், 9 நவம்பர் 1914 இல் தரையிறக்கப்பட்டது |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | திரெசுடன்-வகுப்பு குரூசர் |
பெயர்வு: |
|
நீளம்: | 118.3 m (388 அடி 1 அங்) |
வளை: | 13.5 m (44 அடி 3 அங்) |
பயண ஆழம்: | 5.53 m (18 அடி 2 அங்) |
பொருத்திய வலு: |
|
உந்தல்: |
|
விரைவு: | 23.5 kn (43.5 km/h; 27.0 mph) |
வரம்பு: | 12 knots (22 km/h; 14 mph)இல் 3,760 nmi (6,960 km; 4,330 mi) |
பணிக்குழு: |
|
போர்க்கருவிகள்: |
துப்பாக்கிகள்
|
கவசம்: |
|
'எம்டன்' அலை வீசும் கடலிலும் துரிதமாகச் செல்லக் கூடியது. இதில், முதல்தரமான பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு அவை எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தன. முதலாம் உலகப் போரின் போது 1914இல் பல நாடுகளாலும் வியந்து நோக்கப்படுமளவுக்கு இக்கப்பலின் போரிடும் திறன் இருந்தது. 1914இன் இறுதிப் பகுதியில் "எம்டன்" இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கத்தைய கூட்டுப் படைகளின் 30 கப்பல்களை அழித்தோ அல்லது கைப்பற்றியோ இருக்கிறது. இக்கப்பல் கடைசியாக அவுஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.