ஓப்ரா வின்ஃப்ரே
அமெரிக்க பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை, தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் (பிறப்பு 1954) / From Wikipedia, the free encyclopedia
ஓப்ரா கைல் வின்ஃப்ரே (பிறப்பு சனவரி 29, 1954) ஓர் அமெரிக்க அரட்டைக் காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் வள்ளல். இவர் தன்பெயரைக் கொண்டு நடத்தும் ஓப்ரா வின்ஃப்ரே ஷோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இத்தைகைய வகை நிகழ்ச்சிகளின் வரலாற்றிலேயே மிகவும் உயர்ந்த மதிப்பீடுகளைப் பெற்று பல விருதுகளை வென்றுள்ளது.[3] இவர் இருபதாம் நூற்றாண்டின் மிகுந்த செல்வமுடைய ஆபிரிக்க அமெரிக்கர்,[4][5] அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரும் கருப்பின வள்ளல்,[6][7] மற்றும் ஒருநேரத்தில் உலகின் ஒரே கருப்பு பில்லியனராக இருந்தவர் என்ற சிறப்புகளை உடையவர்.[8][9][10][11][12] இவர் மேலும் இருபதாம் நூற்றாண்டு உலகின் செல்வாக்கு மிகுந்த பெண்களில் ஒருவர்.[13][14][15]
விரைவான உண்மைகள் ஓப்ரா வின்ஃப்ரே, பிறப்பு ...
ஓப்ரா வின்ஃப்ரே | |
---|---|
2004ஆம் ஆண்டு அவரது 50வது பிறந்தநாள் விழாவின்போது. | |
பிறப்பு | ஓர்ப்பா கைல் வின்ஃப்ரே சனவரி 29, 1954 (1954-01-29) (அகவை 70) கோசுயசுகோ, மிசிசிப்பி, அமெரிக்க ஐக்கிய நாடு |
இருப்பிடம் | சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு |
பணி | அரட்டைக் காட்சி தொகுப்பாளர், ஊடக உரிமையாளர், நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1983–நடப்பு |
ஊதியம் | $385 மில்லியன் (2008)[1] |
சொத்து மதிப்பு | < $2.4 பில்லியன் வார்ப்புரு:இழப்பு (மார்ச் 2010)[2] |
துணைவர் | ஸ்டெட்மேன் கிரகாம் |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
www.Oprah.com |
மூடு