கத்தார் பகுரைன் தரைப்பாலம்
From Wikipedia, the free encyclopedia
கத்தார் பகுரைன் தரைப்பாலம் (Qatar Bahrain Causeway) என்பது அரபு நாடுகளான கத்தாருக்கும் பகுரைனுக்கும் இடையில் தரைப்பாலம் அமைக்கும் திட்டமாகும். கத்தார் பகுரைன் நட்புப் பாலம் என்ற பெயராலும் இத்திட்டம் அழைக்கப்படுகிறது. 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 2009 ஆம் ஆண்டு[1] இத்தரைப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் வரை கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. கத்தார் பகுரைன் தரைப்பாலத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திட்டத்துடன் தொடர்பு கொண்ட ஒப்பந்தத் தொழில்கள் கூட்டமைப்பு கலைக்கப்பட்டதாக கத்தார் பகுரைன் தரைப்பால அறக்கட்டளை நிறுவனம் தெரிவிக்கிறது. பொருளாதார சந்தையாகக் கருதப்படும் கத்தாரின் பொருளாதார மண்டலம் பிற நாடுகளுடன் நன்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும், இக்குறிக்கோளின் ஒரு பகுதியே கத்தார் பக்ரைன் தரைப்பாலமாகும். இத்திட்டம் இரு நாடுகளும் அவசியமானதாக கருதப்படவேண்டும் என்று பகுரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் 2011 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் நாள் தெரிவித்தார்[2]. பாலத்தின் கட்டுமானம் 2011 ஆம் ஆண்டில் தொடங்கி 2015 இல் நிறைவடையும் என்றும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் [3]செலவாகும் என்றும் பகுரைன் நாட்டின் அல் வாசட் செய்தித்தாளில் 2011 ஏப்ரல் 27 இல் ஒர் அதிகாரப்பூர்வமற்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது[4][5]. 2022 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர் இப்பாலம் கட்டி முடிக்கப்படும் வகையில் நிதி ஆதாரங்களை எதிர்நோக்குவதாக பகுரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிசம்பர் 2012 இல் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்[6].
கத்தார் பகுரைன் தரைப்பாலம் Qatar Bahrain Bridge | |
---|---|
ஆள்கூற்று | 26°1′22″N 50°48′8″E |
வாகன வகை/வழிகள் | இயங்கூர்தி வாகனங்கள் மற்றும் இரயில் |
கடப்பது | பகுரைன் வளைகுடா |
இடம் | பகுரைன் மற்றும் கத்தார் |
Other name(s) | கத்தார் பகுரைன் நட்புப் பாலம் |
பராமரிப்பு | கத்தார் பகுரைன் தரைப்பால அறக்கட்டளை |
Characteristics | |
மொத்த நீளம் | 40 km (25 mi)* |
History | |
திறக்கப்பட்ட நாள் | 2022 (திட்டமிடப்பட்டது) |