கற்றல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கற்ற என்பது அறிவை, பழக்கங்களை, செயற்திறனை புதிதாக பெற்றுக்கொள்ளல், அல்லது ஏற்கனவே பெற்றவற்றை மெருகூட்டல் அல்லது வலுவூட்டல் ஆகும். இதன்போது வேறுபட்ட தகவல்களின் உருவாக்கமானது நடைபெறுகின்றது. கற்கும் திறனானது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சில இயந்திரங்களுக்கும் காணப்படுகின்றது.[1][2][3]

சிறப்பியல்புகள்

கற்றல் என்பதற்கு சில சிறப்பியல்புகள் காணப்படுகின்றன. இது காலத்துடன் மாற்றமடைந்து செல்லும் . அத்துடன் ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் உடனடியாக பெறப்படும் விடயமும் அல்ல. கட்டாயம் நிகழ்வதும் அல்ல. இது சூழ்நிலைகளினால் வடிவமைக்கப்படக் கூடியது. அதாவது சூழ்நிலை சார்ந்தது. கற்றலானது நாம் ஏற்கனவே பெற்ற அறிவில் தங்கிக் காணப்படுகின்றது. இது நாம் பெற்ற அறிவின் திரட்டு என்பதிலும் பார்க்க ஒரு படிமுறை சார்ந்த வளர்ச்சி என்பதே பொருத்தமானதாகும்.கற்றலானது ஒரு அங்கியினை மாற்றமடையச் செய்கின்றது. அநேகமாக அந்த மாற்றங்கள் நிரந்தரமானவையாக காணப்படும்.

மனிதனின் கற்றலானது கல்வி, சுயமுன்னேற்றம், பாடசாலை, பயிற்சிகள் என்பவற்றினால் உருவாக்கப்படுகின்றது. இது ஒரு இலக்கை நோக்கியதாகவும் ஊக்கப்படுத்தலினால் அதிகரிக்கப்படுவதாகவும் காணப்படுகின்றது.

கற்றல் எவ்வாறு உருவாகின்றது என்ற அறிவானது நரம்புஉளவியல், கல்வி உளவியல், கற்றல் கோட்பாடுகள், கற்பித்தலியல் ஆகிய துறைகளில் செய்யப்படும் ஆய்வுகளினால் விரிவாக்கப்படுகின்றது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads