கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
From Wikipedia, the free encyclopedia
கலிபோர்னியா பல்கலைக்கழகம் - பெர்க்லி (University of Calfornia, Berkeley), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இங்கு ஒரு தமிழ்த் துறை இருக்கிறது.[4] கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பத்து துணை கழகங்களில் இதுவும் ஒன்று. இங்கு படித்தவர்களும், பணியாற்றியவர்களும் உட்பட 72 பேர் நோபல் பரிசுகளையும், 9 உல்ப் விருதுகளும், 7 பீல்டு பதக்கங்களும், 15 டூரிங் விருதுகளும், 45 மெக்கார்தர் பரிசுகளும், 11 புலிட்சர் விருதுகளும் பெற்றுள்ளனர். இங்குள்ள ஆய்வுக்கூடத்தில் 6 தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகளவில் அதிக தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இதுவும் ஒன்று. 1868 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
குறிக்கோளுரை | Fiat Lux (இலத்தீன், எங்கும் ஒளி வீசட்டும்) |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | மார்ச் 23, 1868 |
நிதிக் கொடை | US $2.41 பில்லியன்[1] |
வேந்தர் | ராபர்ட் பிர்கினியூ |
கல்வி பணியாளர் | 1,950 |
பட்ட மாணவர்கள் | 23,482 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 10,076 |
அமைவிடம் | பெர்க்கிலி , , |
வளாகம் | நகர்ப்புறம், 6,651 ஏக்கர்கள் (27 km2)[2] |
நாளேடு | தி டெய்லி கலிபோர்னியன் |
நிறங்கள் | யேல் நீலம், தங்க மஞ்சள் [3] |
தடகள விளையாட்டுகள் | என்.சி.ஏ.ஏ Division I கலிபோர்னியா கோல்டன் பியர்ஸ் |
நற்பேறு சின்னம் | ஓஸ்கி |
சேர்ப்பு | கலிபோர்னியா பல்கலைக்கழகம், Pacific-10, IARU, AAU |
இணையதளம் | berkeley.edu |
மூடு