![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d6/Kalka_Cave_Temple_by_Usma_Ghani.jpg/640px-Kalka_Cave_Temple_by_Usma_Ghani.jpg&w=640&q=50)
கல்கா குகைக் கோயில்
பாக்கித்தானில் உள்ள இந்து கோயில் / From Wikipedia, the free encyclopedia
கல்கா தேவி கோயில், கல்கா தேவி குகைக் கோயில், கல்கா தேவி மந்திர் என்று அழைக்கபடுவது பாக்கித்தானில் உள்ள ஒரு இந்துக் கோயில்களில் ஒன்றாகும். இது பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் அரோரில், கல்கா மலையில் உள்ள ஒரு இயற்கையான குகைக்குள் [1] அமைந்துள்ளது. [2] [3] இந்தக் கோயில் கல்கா தேவியின் ஆஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இது இந்துக்களாலும், இசுலாமியர்களாலும் பார்வையிடப்படுகிறது. [4] இந்தியாவில் இருந்து இந்துக்களும் இங்கு வருகை தருகின்றனர். [5] இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். [6]
விரைவான உண்மைகள் கல்கா குகைக் கோயில், அமைவிடம் ...
கல்கா குகைக் கோயில் | |
---|---|
![]() கல்கா குகைக் கோயிலின் தோற்றம் | |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | சிந்து மாகாணம் |
மாவட்டம்: | சுக்கூர் மாவட்டம் |
அமைவு: | ஆரோர் |
ஆள்கூறுகள்: | 27°37′33.8″N 68°55′51.3″E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோவில் |
மூடு