கிரே (அலகு)
From Wikipedia, the free encyclopedia
கிரே (Gray) என்பது (குறியீடு: Gy) ஒரு பொருளின் மீது விழும் அல்லது படியும் கதிர் ஏற்பளவைக் குறிக்கும் ஒரு அலகாகும். ஒரு கிலோகிராம் நிறையுடைய ஓர் ஊடகம் தன்மேல் விழும் கதிர்வீச்சிலிருந்து ஒரு ஜூல் ஆற்றலை ஏற்குமாயின் அந்த அளவு ஒரு கிரே எனப்படும்[1]. இத்தகு ஆற்றல் அயனியாக்கும் கதிர்வீச்சுகளான எக்சு-கதிர், காமா துகள்கள், அணுக்கரு துகள்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
1 கிரே = 1ஜூல்/கி.கிராம்
இது கதிர்வீச்சு ஏற்பளவின் அலகாகும். ஒரலகு நிறையில் படியும் ஆற்றலின் அளவை அளக்கிறது. அதே போல் கெர்மா என்பது ஒரலகு நிறையுள்ள பொருள் ஏற்கும் கதிர்வீச்சு, இவை ஒளியணுக்களில் உள்ள ஆற்றல் இலத்திரன்களுக்கு மாற்றம் செய்யப்படுவதால் பெறப்படுகிறது.
cgs அலகுகளில் கிரே என்பது ராட் என்ற அலகால் அளக்கப்படுகிறது.(0.01 Gy சமமாகும்).[2] இது அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படும் அலகாகும்.
இங்கிலாந்து இயற்பியலாளர் லூயி கெரால்டு கிரே பெயரால் அழைக்கப்படுகிறது. உயிர் திசுக்களி்ன் மீது எக்சு-கதிர் மற்றும் ரேடியம் கதிர்வீச்சு மூலம் ஏற்படும் விளைவுகளை முதன்முதலில் கண்டறிந்தார்.[3] It was adopted as part of the International System of Units in 1975.