![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Claudette_Colbert_in_The_Misleading_Lady.jpg/640px-Claudette_Colbert_in_The_Misleading_Lady.jpg&w=640&q=50)
கிளாடெட் கோல்பெர்
From Wikipedia, the free encyclopedia
கிளாடெட் கோல்பெர் (Claudette Colbert (/koʊlˈbɛər/ kohl-BAIR;[1] இயற்பெயர் :எமிலி கிளாடெட் சோசான் (Émilie Claudette Chauchoin; செப்டம்பர் 13, 1903 – நவம்பர் 30, 1996) ஒரு அமெரிக்க நாடக மற்றும் திரைப்பட நடிகை ஆவார்.
கிளாடெட் கோல்பெர் Claudette Colbert | |
---|---|
![]() 1932 இல் கிளாடெட் கோல்பெர் | |
பிறப்பு | எமிலி கிளாடெட் சோசான் (1903-09-13)செப்டம்பர் 13, 1903 செயிண்ட்-மண்டே, பிரான்சு |
இறப்பு | சூலை 30, 1996(1996-07-30) (அகவை 92) சிபீக்சுடவுன், பார்படோசு |
கல்லறை | கோடிங்சு பே சர்ச் சிமெட்டரி,சிபீக்சுடவுன், செயிண்ட் பீட்டர்,பார்படோசு 13.241235°N 59.642320°W / 13.241235; -59.642320 |
தேசியம் | அமெரிக்கர்!--See WP:MOSBIO--> |
மற்ற பெயர்கள் | லில்லி கிளாடெட் சாச்சோயின் |
கல்வி | நியூயார்க் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1925–1987 |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) |
வாழ்க்கைத் துணை | நார்மன் பாசுட்டர், யோயல் பிரசுமான் |
கோல்பெர் பிராடுவே அரங்கில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.1920 ஆம் ஆண்டுகளில் பேசும்படங்களில் இவர் தோன்றினார்.பாரமவுண்ட் பிக்சர்சில் துவக்கத்தில் பணிபுரிந்த இவர் பின்னர் சார்பிலா நடிகையானார். 1934 ஆம் ஆண்டில் வெளியான இட் ஹாப்பன்டு ஒன் நைட் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகைக்கான அகாதமி விருது வென்றார். மேலும் இரு அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் அதே ஆண்டில் வெளியான கிளியோபட்ரா மற்றும் 1942 ஆம் ஆண்டில் வெளியான தெ பால்ம் பீச் ஸ்டோரி ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.
அவரது வட்ட முகம், பெரிய கண்கள், அழகான, பிரபுத்துவ முறையில் நடப்பது, மற்றும் இயல்புத் திறன் [2] போன்றவற்றின் மூலம் 1930 முதல் 1940 ஆண்டுகள் வரை அதிக ஊதியம் பெறும் நட்சத்திரமாக அறியப்பட்டார்.[3] மற்றும், 1938 மற்றும் 1942 ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் பெற்ற நட்சத்திரமாக அறியப்பட்டார்.தனது தொழில் வாழ்க்கையில் 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 1935 முதல் 1949 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலங்களில் இவர் ஃபிரட் மக்முரேவுடன் இணைந்து ஏழு திரைப்படங்களிலும் 1930 முதல் 1933 ஆம் ஆண்டுகள் வரை ஃபெடரிக் மார் உடன் இணைந்து மூன்று திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.