கிழக்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்
From Wikipedia, the free encyclopedia
கிழக்கு வளர்ச்சி பிராந்தியம் அல்லது பூர்வாஞ்சல் வளர்ச்சி பிராந்தியம் (Eastern Development Region) (நேபாள மொழி: पुर्वाञ्चल विकास क्षेत्र, Purwānchal Bikās Kshetra) நேபாளத்தின் ஐந்து வளர்ச்சிப் பிராந்தியங்களில் ஒன்றான இப்பிராந்தியம் நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பிராந்தியம் நேபாளத்தின் தென்கிழக்கின் தராய் பகுதியிலிருந்து, வடக்கின் இமயமலை பகுதி வரை, தெற்கு – வடக்காக அமைந்துள்ளது. இப்பிராந்தியத்தில் வடக்குப் பகுதி திபெத் தன்னாட்சி பகுதியை எல்லையாகக் கொண்டது. [1] இப்பிராந்தியத்தின் தெற்கில் தராய் சமவெளியும், நடுவில் குன்றுப் பகுதிகளும், வடக்கில் மலைப் பகுதிகளும் உள்ளது. கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தின் நிர்வாகத் தலைமையிடம் தன்குட்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான தன்குட்டா நகரத்தில் அமைந்துள்ளது. [2]28,456 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது கிழக்கு வளர்ச்சி பிராந்தியம்.
கிழக்கு வளர்ச்சி பிராந்தியம்
பூர்வாஞ்சல் விகாஸ் சேத்திரம் | |
---|---|
நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியாங்கள் | |
நாடு | நேபாளம் |
பிராந்தியம் | கிழக்கு வளர்ச்சி பிராந்தியம் |
தலைமையிடம் | தன்குட்டா, கோசி மண்டலம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 28,456 km2 (10,987 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 58,11,555 |
pop. note | |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள நேரம்) |