கீலான் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
கிலான் மாகாணம் (Gilan Province (பாரசீக மொழி: اُستان گیلان, Ostān-e Gīlān, also Latinized as Guilan)[10] என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்றாகும். இது காசுப்பியன் கடல் ஓரமாக, ஈரானின் மூன்றாம் வட்டாரத்தில் உள்ளது. இது மஜன்தரன் மாகாணத்திற்கு மேற்காகவும், அர்தாபில் மாகாணத்தின் கிழக்கிலும், சஞ்சன் மாகாணம் மற்றும் கஜின் மாகாணங்களுக்கு வடக்கிலும் உள்ளது.[11] இதன் வடக்கில் அஜர்பைஜான் குடியரசையும், காசுபியன் கடல் பகுதியில் உருசியாவையும் எல்லையாக கொண்டுள்ளது.
கிலான் மாகாணம்
Gilan Province اُستان گیلان | |
---|---|
கிலான் மாகாண மாவட்டங்கள் | |
ஈரானில் கிலான் மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 37.2774°N 49.5890°E / 37.2774; 49.5890 | |
நாடு | ஈரான் |
வட்டாரம் | மூன்றாம் வட்டாரம் |
தலைநகரம் | இராசுத்து |
மாவட்டங்கள் | 16 |
அரசு | |
• ஆளுநர் | முஸ்தபா சலாரி.[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,042 km2 (5,422 sq mi) |
மக்கள்தொகை (2016)[2] | |
• மொத்தம் | 25,30,696 |
• அடர்த்தி | 180/km2 (470/sq mi) |
நேர வலயம் | ஒசநே+03:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+04:30 (IRST) |
முதன்மை மொழிகள் | கிலாக்கி தாலீஷ் |
பிற மொழிகள் | பாரசீகம்[3] குர்தி |
இந்த மாகாணத்தின் வட பகுதியானது தெற்கு (ஈரானிய) தாலீசின் ஒரு பகுதி பகுதியாகும். மாகாணத்தின் மையத்தில் அதன் முதன்மை நகரான ராஷ்ட் நகரம் உள்ளது. இந்த மாகாணத்தில் அஸ்தாரா, அஸ்தானே-இ அஷ்பிரிய்யா, புமன், லஹிஜான், லாங்ரூட், மாசூல், மஞ்சுல், ருட்கர், ருட்ஸர், ஷாஃப்ட், ஹாஷ்ட்பார் (நகரம்), சோம்மே சாரா ஆகிய பிற நகரங்கள் உள்ளன.
இதன் பிரதான துறைமுகமாக பந்தர்-இ அன்சாலி (முன்பு பண்டார்-இ பாஹ்லவி) துறைமுகம் உள்ளது.