குரு நானக் விளையாட்டரங்கம்
இந்தியாவின் பஞ்சாபில் உள்ள விளையாட்டரங்கம் / From Wikipedia, the free encyclopedia
குரு நானக் விளையாட்டரங்கம் (Guru Nanak Stadium) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் அமைந்துள்ள ஒரு கால்பந்து மைதானமாகும். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்கள் இங்கு நடைபெற்றன. தற்போது பஞ்சாப் கால்பந்து சங்கத்தின் ஈரோ ஐ-கூட்டிணைவு அணியின் சொந்த மைதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. 20,000 பார்வையாளர்கள் அமர்ந்து இரசிக்கும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. 8 செயற்கைத் தட ஓடுபாதைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு ஓடுபாதைகள் பயிற்சிக்கான பாதைகளாகும். எந்தவொரு தேசிய அல்லது பன்னாட்டுப் போட்டியையும் நடத்துவதற்கான பன்னாட்டு அளவிலான தரங்களுடன் இந்த ஓடுபாதைகள் ஒத்துப்போகின்றன. நன்கு பராமரிக்கப்படும் கால்பந்து ஆடுகளம் இவ்விளையாட்டு அரங்கிலுள்ளது. வருடாந்திர தேசிய கால்பந்து கூட்டிணைவுப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன.[1][2][3][4][5][6]