குளம்பு
From Wikipedia, the free encyclopedia
குளம்பு அல்லது குளம்பி அல்லது குளம்புகள்[1] (hoof) (/ˈhuːf/ பாலூட்டி விலங்குகளில் குறிப்பாக குதிரை, கழுதை, ஆடு, மாடு, பன்றி, மான், வரிக்குதிரை, ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி, நீர்யானை போன்ற விலங்கினங்களின் கால்களின் அடிப்பகுதியை பாதுகாக்கும் கனமான நகத்தால் மூடப்பட்டிருக்கும். சில குளம்பிகளின் மேல் அடர்ந்த மயிர்களால் சூழப்பெற்றிருக்கும்.[2]
இவ்விலங்குகள் ஓடும் போது, இவற்றின் அடிப் பாதங்கள் கற்களாலும், முற்களாலும் பாதிக்காமல் இருக்க கனமான நகம் போன்ற இக்குளம்புகள் காக்கிறது. இக்குளம்பிகள் நகம் போன்று கனத்த பகுதியாகும். தொடர்ந்து வளரக்கூடிய குளம்பிகளை அவ்வப்போது உரிய இயந்திரங்களால் சீர்செய்து இலாடம் அடிப்பர்.