கூட்டரசு சாலை 2 (மலேசியா)
தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியையும் மேற்குப் பகுதியையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை / From Wikipedia, the free encyclopedia
கூட்டரசு சாலை 2 (ஆங்கிலம்: Federal Route 2) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியையும் மேற்குப் பகுதியையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். 276.9 கி.மீ. (172 மைல்) நீளம் கொண்டது. 1887-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சாலை. அந்த வகையில் இந்தக் கூட்டரசு சாலை 2, மலேசியாவில் வரலாறு படைக்கும் சாலைகளில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் வழித்தட தகவல்கள், நீளம்: ...
கூட்டரசு சாலை 2 | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 276.9 km (172.1 mi) |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் துறைமுகத்தையும்; பகாங் மாநிலத்தில் உள்ள குவாந்தான் துறைமுகத்தையும் இந்தச் சாலை இணைக்கிறது.[1]
தீபகற்ப மலேசியாவின் கிழக்கு - மேற்கு கடற்கரைகளை இணைக்கும் சாலை அமைப்பின் முதுகெலும்பாக இருந்தது. இந்தச் சாலையின் மேம்பாட்டுச் சாலையாக இப்போது வந்து உள்ள சாலை (East Coast Expressway E8). கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை .