கெய்ரோ
எகிப்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
கெய்ரோ (Cairo, அரபு மொழியில்:القاهرة - அல்-காஹிரா) எகிப்து நாட்டின் தலைநகரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். அரபு உலகிலும் ஆப்பிரிக்காவிலும் இதுவே மிகப் பெரிய நகராகும். பெரும் கெய்ரோ எனப்படும் மாநகரப் பகுதி உலகில் 16வது பெரிய நகரப்பகுதியாக விளங்குகிறது. இந்நகரம் நைல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 15 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.[6][7] இந்த நகரம் கிபி 969இல் நிறுவப்பட்டது. இங்குள்ள இசுலாமிய கட்டிடக் கலையைக் குறிக்கும் முகமாக ஆயிரம் மினராட்டுகளின் நகரம் என்று செல்லப் பெயரிடப்பட்டுள்ள இந்நகரம், இந்தப் பகுதி மக்களின் பண்பாட்டு மற்றும் அரசியல் வாழ்வில் மையமாக இருந்துள்ளது. தவிரவும் இது தொன்மைக்கால எகிப்தின் நகரங்களான மெம்பிசு, கீசா, பூசுடாட் ஆகியவற்றிற்கு அருகில் உள்ளது. மேலும் பெரிய ஸ்பிங்ஸ், கீசாவின் பிரமிடுகளுக்கும் வாயிலாக உள்ளது.
கெய்ரோ القـــاهــرة (அரபு) | |
---|---|
தலைநகரம் | |
அல்-காஹிரா | |
மேல் இடப்புறம்: கெய்ரோ நகர்மையம்; மேல் வலப்புறம்: இபின் துலுன் மசூதி; நடுவில்: கெய்ரோ சிடாடெல்; கீழ் இடப்புறம்: நைல் ஆற்றில் பெலுக்காப் படகு; கீழ் நடுவே: கெய்ரோ கோபுரம்; கீழ் வலது: மூயிசு சாலை | |
கொடி சின்னம் | |
அடைபெயர்(கள்): ஆயிரம் மினாரட்டுகளின் நகரம், அரபுலகின் தலைநகரம் | |
ஆள்கூறுகள்: 30°02′40″N 31°14′09″E | |
நாடு | எகிப்து |
கவர்னரேட் | கெய்ரோ கவர்னரேட் |
அரசு | |
• ஆளுநர் | கலீத் அப்தெல் ஆல்[1] |
பரப்பளவு[lower-alpha 1][2][3] | |
• தலைநகரம் | 214 km2 (83 sq mi) |
• Metro | 3,085.12 km2 (1,191.17 sq mi) |
ஏற்றம் | 23 m (75 ft) |
மக்கள்தொகை (2021-census) | |
• தலைநகரம் | 10,025,657[4] |
• அடர்த்தி | 3,249/km2 (8,410/sq mi) |
• பெருநகர் | 21,323,000[5] |
நேர வலயம் | கி.ஐ.நே (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | கி.ஐ.கோ.நே (ஒசநே+3) |
தொலைபேசி குறியீடு | (+20) 2 |
இணையதளம் | www |
அலுவல் பெயர் | வரலாற்று சிறப்புமிக்க கெய்ரோ |
வகை | Cultural |
வரன்முறை | i, v, vi |
தெரியப்பட்டது | 1979 |
உசாவு எண் | 89 |
எகிப்தியர்கள் இந்த நகரத்தின் தாக்கத்தினை முன்னிட்டு கெய்ரோவை பெரும்பான்மையும் எகிப்தின் அராபிய பலுக்கலான மஸ்ர் (مصر) என்றே அழைக்கின்றனர்.[8][9] இதன் அலுவல்முறையானப் பெயர் القاهرة அல்-காஹிரா, "வாகையாளர்" அல்லது "வெற்றி கொண்டான்" எனப் பொருள்படும்; சிலநேரங்களில் பேச்சுவழக்கில் இது كايرو காய்ரோ எனப்படுகிறது.[10] மேலும் உலகின் தாயகம் எனப் பொருள்படும் உம் அல்-துன்யா, என்றும் குறிப்பிடப்படுகின்றது.[11]
கெய்ரோவில் அரபு உலகின் மிகவும் பழமையானதும் பெரியதுமான திரைப்படத்துறை இயங்குகிறது. இங்குதான் உலகின் மிகப் பழைமையான கல்விநிறுவனங்களில் இரண்டாவதாக உள்ள உயர்கல்வி நிறுவனமான அல்-அசார் பல்கலைக்கழகம் உள்ளது. பல பன்னாட்டு ஊடக, வணிக, பிற அமைப்புகளின் வட்டாரத் தலைமையகமாக கெய்ரோ விளங்குகிறது. அரபுநாடுகள் கூட்டமைப்பின் தலைநகரமாகப் பெரும்பாலும் இருந்துள்ளது.
453 சதுர கிலோமீட்டர்கள் (175 sq mi) பரப்பளவில் 6.76 மில்லியன்[12] மக்கள்தொகையடன் கெய்ரோ எகிப்தின் மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது. நகரின் புறநகர்ப் பகுதிகளில் வாழும் கூடுதலான 10 மில்லியன் மக்களுடன் ஆப்பிரிக்காவிலும் அரபு உலகிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக கெய்ரோ மாநகரப்பகுதி விளங்குகிறது. நகரப் பரப்பளவிலான மாநகரப் பகுதிகளில் பத்தாவது மிகப் பெரும் நகரமாகவும் விளங்குகிறது.[13] மற்ற பெருநகரங்களைப் போலவே, கெய்ரோவிலும் கூடுதலான போக்குவரத்து நெரிசலும் சூழல்மாசடைவும் உள்ளது. கெய்ரோவின் பாதாளத் தொடர்வண்டி, கெய்ரோ மெட்ரோ, உலகின் பதினைந்தாவது போக்குவரத்துமிக்க தொடர்வண்டி அமைப்பாக விளங்குகிறது.[14] இதை ஆண்டுக்கு 1 பில்லியனுக்கும் கூடுதலான[15] பயணிகள் பாவிக்கின்றனர். பொருளியலில் கெய்ரோ மத்திய கிழக்கு நாடுகளில் முதலாவதாகவும் [16] உலகளவில் 43வதாகவும் உள்ளது.[17]