கோப்த்துக்கள் (Copts) (காப்டிக்: ⲟⲩⲢⲉⲙ̀ⲛⲭⲏⲙⲓ ̀ⲛ̀Ⲭⲣⲏⲥⲧⲓ̀ⲁⲛⲟⲥ ou.Remenkīmi en.Ekhristianos; மிசிரி மொழி: اقباط, எகிப்தின் பழங்குடி கிறித்தவர்கள் ஆவர். நான்காம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை எகிப்தை இசுலாமியர்கள் கைப்பற்றும்வரை ரோமானிய எகிப்தில் கிறித்தவம் பெரும்பான்மை சமயமாக திகழ்ந்தது.[12] தற்போதைய எகிப்தில் குறிப்பிடத்தக்க அளவிலான சிறுபான்மையினராக உள்ளனர். இவர்களது மொழியான காப்டிக் மொழி ரோமன் காலத்திய எகிப்தில் பேசப்பட்ட வழக்கிலிருந்து நேரடியாக பெறப்பட்டதாகும். 18ஆம் நூற்றாண்டிலிருந்து இம்மொழி அழிந்து வருவதுடன் சமயச்சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை | |
---|---|
கிட்டத்தட்ட 10 - 20 மில்லியன் [1] | |
பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள் | |
எகிப்து | 5 - 15 மில்லியன் வரையென கணிப்பிடப்பட்டுள்ளது[3] |
சூடான் | கிட்டத்தட்ட 0.5 மில்லியன் |
ஐக்கிய அமெரிக்கா | கிட்டத்தட்ட 0.2 - 1 மில்லியன்[4][5][6][7][8] |
கனடா | கிட்டத்தட்ட 0.2 மில்லியன்[1][9] |
ஆத்திரேலியா | கிட்டத்தட்ட 75,000 (2003)[10][11] |
சமயங்கள் | |
பெரும்பாண்மை: காப்டு பழைமவாத கிறித்தவம். சிறுபான்மை: காப்டு கத்தோலிக்கம்; பல புரட்டஸ்தாந்து சபைகள் | |
புனித நூல்கள் | |
விவிலியம் | |
மொழிகள் | |
எகிப்திய அரபு பொது: காப்டிக் மொழி |
மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரும் கிறித்தவ சிறுபான்மை இனத்தவராக விளங்கும் இவர்கள் எகிப்தின் மக்கள்தொகையில் 10%ஆக உள்ளனர்.[13] இவர்கள் பெரும்பாலும் அலெக்சாண்டிரியாவின் காப்டிக் ஆர்தோடாக்ஸ் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்.[14] இதில் உறுப்பினரல்லாத 80,000 பேர்கள்) பிற காப்டிக் கத்தோலிக்க திருச்சபைகள் அல்லது காப்டிக் சீர்திருத்த திருச்சபைகளிடையே பிளவுபட்டுள்ளனர்.
எகிப்தில் சிறுபான்மையினராக உள்ள காரணத்தால் காப்ட் எகிப்தியர்கள் தற்கால எகிப்தில் பெருத்தளவு பாகுபாட்டிற்கும் வன்முறைசார் இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.[15]
மேற்கோள்கள்
உசாத்துணைகளும் மேல் விவரங்களுக்கும்
வெளியிணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.