கோலா சிலாங்கூர்
மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
கோலா சிலாங்கூர் என்பது (மலாய்: Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor; சீனம்: 瓜拉雪兰莪) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் வடமேற்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரம். கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் மற்றும் நிர்வாக மையம். கிள்ளான் நகரில் இருந்து 50 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் கோலா சிலாங்கூர், நாடு ...
கோலா சிலாங்கூர் | |
---|---|
Kuala Selangor | |
ஆள்கூறுகள்: 3°20′31″N 101°14′46″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
நகரம் | கோலா சிலாங்கூர் |
உள்ளூராட்சி | கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றம் |
அரசு | |
• நகராட்சி மன்றத் தலைவர் | ரகிலா பிந்தி ரஹ்மாட் |
• மாவட்ட அதிகாரி | ஜொகாரி அன்வார்[1] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 45xxx |
தொலைபேசி எண் | +6-03 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
மூடு
கோலா சிலாங்கூர் நகரத்திற்கு மிக அருகில் உள்ள நகரங்கள்: தஞ்சோங் காராங்; செகிஞ்சான்; ஜெராம் (சிலாங்கூர்); பத்து ஆராங்; ரவாங்; காப்பார்; கிள்ளான். கோலா சிலாங்கூர் நகரம், கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.[2]
கோலா சிலாங்கூர் நகரத்தை சிலாங்கூர் நதி பிரிக்கின்றது. சிலாங்கூர் நதி இந்த நகரத்தை ஊடுருவிச் செல்வதால், அந்த நதியின் பெயரே இந்தக் கோலா சிலாங்கூர் நகரத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.