![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ef/Shakira_at_Obama_Inaugural_%2528cropped%2529.jpg/640px-Shakira_at_Obama_Inaugural_%2528cropped%2529.jpg&w=640&q=50)
சக்கீரா
From Wikipedia, the free encyclopedia
சக்கீரா இசபெல் மெபாரக் ரிபோல் (Shakira Isabel Mebarak Ripoll) என்கிற சக்கீரா அல்லது ஷக்கீரா (Shakira, பிறப்பு: பெப்ரவரி 2, 1977) என்பவர் ஒரு கொலம்பியப் பாடகியும், லெபனானிய-ஐரோப்பிய மரபுசார்ந்த பாடலாசிரியரும், இசையமைப்பாளரும், பாடல் தயாரிப்பாளரும், ஆடல்விரும்பியும், கொடையாளருமாவார். இவர் 1990களின் இடையிலிருந்து பாப் இசை மூலமாக இலத்தீன் அமெரிக்காவில் அறிமுகம் ஆனவர். எசுப்பானிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஷக்கீரா, சரளமாக ஆங்கிலம், போர்த்துக்கீசிய மொழி, இத்தாலிய, அரபு மொழியும் தெரிந்தவர். லாண்டரி சர்வீஸ் (Laundry Service) என்கிற ஆங்கில இசைத்தொகுப்பின் மூலம் ஆங்கிலம் பேசும் இசைவிரும்பிகளின் இதயத்தில் நுழைந்தார். இந்த இசைத்தொகுப்பு 13 மில்லியன் படிகள் விற்றுத் தீர்ந்தன. இவர், கொலம்பிய கலைஞர்களிலேயே கூடுதல் பணம் ஈட்டும் அளவுக்கு உயர்ந்தார். இவரின் இசைத் தொகுப்புகள் 50 மில்லியன் வரை உலகம் முழுக்க விற்று தீர்ந்தன. இவர், இரண்டு கிராமி விருதுகள், எட்டு இலத்தீன் கிராமி விருதுகள், பதினைந்து பில்போர்ட் இசை விருதுகள், மூன்று எம்.டி.வி. இசை விருதுகள், 'மக்கள் விருப்பம்' விருது (People's Choice Award) என்று பல்வேறு விருதுகளை உலகம் முழுக்க பெற்றிருக்கிறார். கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். மேலும் பில்போர்ட் ஹாட் 100 ல் முதல் இடம்பெற்ற முதல் தென் அமெரிக்க கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைப்போன்றே ஆஸ்திரேலிய ARIA பட்டியலிலும், யுனைடெட் வர்ல்ட் பட்டியல் மற்றும் UK Singles பட்டியலிலும் இடம்பெற்றவர்.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
![]() | இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
ஷக்கீரா Shakira | |
---|---|
![]() எக்குவடோரில் இசைச் சுற்றுலாவின் போது ஷக்கீரா. | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஷக்கீரா இசபெல் மெபாரக் ரிபோல் |
பிற பெயர்கள் | ஷக்கீ, ஷக் |
பிறப்பு | பெப்ரவரி 2, 1977 (1977-02-02) (அகவை 47) பாரன்கில்லா, கொலம்பியா |
இசை வடிவங்கள் | இஇலத்தீன் பாப் இசை, எசுப்பானிய ராக் இசை, |
தொழில்(கள்) | பாடகர்-பாடலாசிரியர், தயாரிப்பாளர் |
இசைக்கருவி(கள்) | பாடல், கிட்டார், ஹார்மோனிக்கா, drums[1] |
இசைத்துறையில் | 1990 – இன்று வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | சோனி பிஎம்ஜி, எப்பிக் |
இணைந்த செயற்பாடுகள் | அலெஹான்ட்ரோ சான்ஸ், பியான்சே, குஸ்தாவோ செராட்டி, வைக்லெஃப் ஜான், கார்லோஸ் சான்டானா, மிகெல் போசே |
இணையதளம் | www.shakira.com |
யுனைட்டெட் வர்ல்ட் பட்டியலின் அண்மைய கணக்கின்படி கடந்த பத்தாண்டுகளில் நாலாவது வெற்றிகரமான கலைஞர் என்று ஷக்கீராவை பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள். இவரின் தனிபாடல்கள் இரண்டும் ஒரே சமயத்தில் முதல் பத்துக்குள்ளான இடத்தைப் பெற்றிருக்கின்றன. மேலும் இச்சாதனை வேறு எவருக்குமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷக்கீராவுக்கு ஹாலிவுட் நட்சத்திரத் தகுதி விருது ஒன்று வழங்கப்பட இருக்கிறது. இது, முதல் கொலம்பியனாக அவர் பெறும் விருதாக இருக்கும்.