சவர்மா
லெவண்டைன் பிராந்திய இறைச்சி உணவு / From Wikipedia, the free encyclopedia
சவர்மா (Shawarma, அரபு மொழி: شاورما) என்பது ஒரு பிரபலமான லெவண்ட்டீனிய[4] பிராந்திய உணவாகும், இது இறைச்சியை மெல்லிய துண்டுகளாக வெட்டி, கூம்பு போன்ற வடிவத்தில் ஒரு கம்பியில் குத்தி அடுக்கி, மெதுவாகத் சுழலக்கூடிய அச்சில் செங்குத்தாக நிறுத்தப்பட்டு சுடப்படுகிறது. முதலில் ஆட்டிறைச்சியால் தயாரிக்கப்பட்டது, இப்போது கோழி, வான்கோழி, மாட்டிறைச்சி ஆகியவற்றால் செய்யப்படுகிறது.[5][6][1] சமைத்த இறைச்சிக் கூம்பின் மேற்பரப்பில் இருந்து மெல்லிய துண்டுகள் தொடர்ந்து சுழலும் போது அறுத்தெடுக்கப்படுகின்றது.[7][8] ஷவர்மா உலகின் மிகவும் பிரபலமான சாலையோர உணவுகளில் ஒன்றாகும், குறிப்பாக எகிப்து, லெவன்ட், காகசஸ், அரேபிய தீபகற்பம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக உள்ளது.[9][10]
விரைவான உண்மைகள் வகை, தொடங்கிய இடம் ...
வகை | இறைச்சி |
---|---|
தொடங்கிய இடம் | சிரியா, உதுமானியப் பேரரசு[1][2][3] |
தொடர்புடைய சமையல் வகைகள் | துருக்கி, லெவண்ட், மத்திய கிழக்கு |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடாக |
முக்கிய சேர்பொருட்கள் | இறைச்சி: ஆடு, கோழி, மாடு, வான்கோழி மரக்கறி, ஊறுகாய் |
இதே போன்ற உணவுகள் | டொனர் கேபாப் |
மூடு