சாம்பல் கூழைக்கடா
ஒரு வகை பறவை / From Wikipedia, the free encyclopedia
சாம்பல் கூழைக்கடா (Spot-billed pelican) என்பது கூழைக்கடா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தெற்காசியாவில் தென் ஈரானிலிருந்து இந்தியா முழுவதுவும், கிழக்கு இந்தோனேசியா வரை இனப்பெருக்கம் செய்கிறது. இது பெரிய உள்நாட்டு மற்றும் கடலோர நீர்நிலைகள், குறிப்பாக பெரிய ஏரிகளில் காணப்படும் பறவை ஆகும். தொலைவில் இருந்து பார்க்கும்போது, மற்ற கூழைக்கடாக்களில் இருந்து இவற்றை வேறுபடுத்திக் காண்பது கடினம். ஆனால் அருகிலுருந்து காணும்போது இவற்றின் மேல் தாடையில் உள்ள புள்ளிகள், பிரகாசமான வண்ணங்கள் இல்லாமை, சாம்பல் நிற இறகுகள் ஆகிய தனித்த அடையாளங்களால் இவற்றை அடையாளம் காணமுடியும். சில பகுதிகளில், இந்த பறவைகள் மனித குடியிருப்புகளுக்கு அருகில் தங்கள் குடியிருப்பைக் கொண்டு கூடு கட்டுகின்றன.
விரைவான உண்மைகள் சாம்பல் கூழைக்கடா, காப்பு நிலை ...
சாம்பல் கூழைக்கடா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | பெ. பிலீப்பென்னீசு |
இருசொற் பெயரீடு | |
பெலிகேனசு பிலீப்பென்னீசு ஜிமெலின், 1789 | |
மூடு