![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8d/Signal-Logo.svg/langta-640px-Signal-Logo.svg.png&w=640&q=50)
சிக்னல்
இலவச தொடர்பு செயலி / From Wikipedia, the free encyclopedia
சிக்னல் (Signal ) என்பது சிக்னல் அறக்கட்டளை மற்றும் சிக்னல் மெசஞ்சர் உருவாக்கிய பன்னியக்குதள மறையாக்க செய்தியிடல் சேவையாகும் . இணையத்தைப் பயன்படுத்தி கணினிக் கோப்புகள், குரல் குறிப்புகள், படங்கள் மற்றும் நிகழ்படங்களை ஒருவருக்கொருவர் மற்றும் குழு செய்திகளை அனுப்ப வகை செய்கிறது.[9] ஒருவருக்கொருவர் மற்றும் குழு குரல் மற்றும் நிகழ்பட அழைப்புகளைச் செய்ய இயலும் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதள பதிப்புகளில் இதனை விரும்பினால் ஒரு குறுஞ்செய்திச் சேவையாகப் பயன்படுத்த முடியும். [10]
![]() | |
உருவாக்குனர் |
|
---|---|
தொடக்க வெளியீடு | சூலை 29, 2014 (2014-07-29)[1][2] |
இயக்கு முறைமை | |
மென்பொருள் வகைமை | மறையாக்கம் செய்யப்பட்ட குறுஞ்செய்தி நிகழ்படம் அனுப்புதல் |
உரிமம் |
சிக்னல் நிலையான செல்லுலார் தொலைபேசி எண்களை அடையாளங் காட்டிகளாகப் பயன்படுத்தி , ஆதியந்த மறையீடு மூலமாக அனைத்து சிக்னல் பயனர்களின் தகவல் தொடர்புகளையும் பாதுகாக்கிறது. பயனர்கள் தங்கள் அலைபேசி தொடர்புகளின் அடையாளத்தையும் தரவு சேனலின் ஒருமைப்பாட்டையும் சுயாதீனமாக சரிபார்க்க இயலும். [10] [11]
இலாப நோக்கற்ற சிக்னல் அறக்கட்டளையை பிரையன் ஆக்டன் என்பவரால் 50 மில்லியன் டாலரில், பிப்ரவரி 2018 இல் தொடங்கப்பட்டது. [12]ஜூன் 2020 கணக்கின்படி இந்த செயலியினை 32.4 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 2020 அன்றைய நிலவரப்படி 20 மில்லியன் மாத உத்வேக ஊடகப் பயன்பாட்டாளர்கள் இருந்துள்ளனர். [13]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Signal-installing1-64bit-debian10.png/640px-Signal-installing1-64bit-debian10.png)