![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/Structural_formula_of_%2528RS%2529-Citronellal.svg/langta-640px-Structural_formula_of_%2528RS%2529-Citronellal.svg.png&w=640&q=50)
சிட்ரோனெல்லால்
From Wikipedia, the free encyclopedia
சிட்ரோனெல்லால் (citronellal) என்பது C10H18O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் இதை ரோடினால் அல்லது 3,7-டைமெத்திலாக்ட்-6-ஈன்-1- ஆல் என்ற பெயர்களாலும் அழைப்பர். மோனோடெர்பீனாய்டு வகைச் சேர்மம் என்று சிட்ரோனெல்லால் வகைப்படுத்தப்படுகிறது. சிட்ரோனெல்லா எண்ணெய்க்கு அதன் தனித்துவமான எலுமிச்சை வாசனையை வழங்கும் டெர்பீனாய்டு வேதிச் சேர்மங்களின் கலவையில் இது முக்கிய கூறு ஆகும்.
![]() | |
![]() (+)-சிட்ரோனெல்லால் | |
![]() (-)-சிட்ரோனெல்லால் | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3,7-டைமெத்திலாக்ட்-6-ஈனால் | |
இனங்காட்டிகள் | |
106-23-0 ![]() | |
ChEBI | CHEBI:47856 ![]() |
ChEMBL | ChEMBL447944 ![]() |
ChemSpider | 7506 ![]() |
EC number | 203-376-6 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C17384 ![]() |
பப்கெம் | 7794 |
| |
UNII | QB99VZZ7GZ ![]() |
பண்புகள் | |
C10H18O | |
வாய்ப்பாட்டு எடை | 154.25 கி/மோல் |
அடர்த்தி | 0.855 கி/செ.மீ3 |
கொதிநிலை | 201 முதல் 207 °C (394 முதல் 405 °F; 474 முதல் 480 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிம்போபோகோன் எனப்படும் எலுமிச்சைப்புல், கோரிம்பியா சிட்ரியோதோரா எனப்படும் மரம், லெப்டோசிபெர்னம் பீட்டர்சோனை எனப்படும் புதர்ச்செடி போன்ற தாவரங்களின் காய்ச்சி வடிகட்டிய எண்ணெயின் பிரதானமான உட்பொருள் சிட்ரோனெல்லா ஆகும்.[2] காப்பிர் எலுமிச்சைப்பழத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயின் 80% சிட்ரோனெல்லின் (–)-(எசு)-ஆடியெதிர் மாற்றுருவால் ஆக்கப்பட்டுள்ளது. இதுவே அந்நறுமனத்திற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.
சிட்ரோனெல்லா ஒரு பூச்சி விரட்டியாகும். குறிப்பாக கொசுக்களை விரட்டும் பண்பு இதில் அதிகமுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[3] மேலும் இது பூசண எதிர்ப்பியாகவும் செயல்படவல்லது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.[4]