![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2b/Sukhoi_Design_Bureau%252C_054%252C_Sukhoi_Su-57_%252849581303977%2529.jpg/640px-Sukhoi_Design_Bureau%252C_054%252C_Sukhoi_Su-57_%252849581303977%2529.jpg&w=640&q=50)
சுகோய் எஸ்யு-57
சுகோய் உருவாக்கிய இரட்டை எஞ்சின் ஸ்டெல்த் மல்டிரோல் போர் விமானம் / From Wikipedia, the free encyclopedia
சுகோய் எஸ்யு-57 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும்.[3] இது உருசிய நாட்டின் சுகோய் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்ற இரட்டைப் பொறி கொண்ட ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.[4] பன்முகச் சண்டை வானூர்தியான இது வான் மேலாதிக்கம், தரைத்தாக்குதல் ஆகிய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.[5]
விரைவான உண்மைகள் எஸ்யு-57 Su-57, வகை ...
எஸ்யு-57 Su-57 | |
---|---|
![]() | |
வகை | கரவு பன்முகச் சண்டை வானூர்தி |
உருவாக்கிய நாடு | உருசியா |
உற்பத்தியாளர் | ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம் (யுனைடெட் ஏர்க்ராப்ட் கார்ப்பரேஷன்) |
வடிவமைப்பாளர் | சுகோய் |
முதல் பயணம் | 29 சனவரி 2010; 14 ஆண்டுகள் முன்னர் (2010-01-29) |
அறிமுகம் | 25 திசம்பர் 2020; 3 ஆண்டுகள் முன்னர் (2020-12-25) |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது[1] |
முக்கிய பயன்பாட்டாளர் | உருசிய வான் படை |
உற்பத்தி | 2019–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | 32[2] |
மாறுபாடுகள் | சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ |
மூடு
இது உருசிய இராணுவ சேவைக்காக கரவு தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் வானூர்தியாகும். இந்த வானூர்தியானது உருசிய வான்படையில் மிக்-29 மற்றும் சுகோய் எஸ்யு-27 ஆகிய வானூர்திகள் ஓய்வு பெறும் போது அதிகளவில் சேர்க்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் முன்மாதிரி 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[6]