![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Suchindram_Theroor_Lake_Watchtower.jpg/640px-Suchindram_Theroor_Lake_Watchtower.jpg&w=640&q=50)
சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்
From Wikipedia, the free encyclopedia
சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் (Suchindram Theroor Birds Sanctuary) ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாகும். இது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது, சுசீந்திரம் குளம் மற்றும் தேரூர் குளம் மற்றும் வேம்பன்னூர் நீர்த்தட வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதியாகும். அனைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் நகருக்கு அருகில் உள்ளது. இது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி இடையே தேசிய நெடுஞ்சாலை எண் 44 இல் அமைந்துள்ளது. இது மத்திய ஆசியப் பறக்கும் பாதையின் தென்கோடி எல்லையில் அமைந்துள்ளதால், இடம்பெயர் பறவைகளுக்கு முக்கியமான இடமாகும். 2002 ஆம் ஆண்டு, இப்பகுதியைப் 'பறவைகள் சரணாலயம்' என அறிவிக்கக் கோரிக்கை விடப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது.[3][4] சுசீந்திரம் குளத்தின் அமைவிடம் 8°7′30″N 77°27′30″E ஆகும். தேரூர் குளத்தின் அமைவிடம் 8°10′45″N 77°27′45″E ஆகும். இச்சரணாலயத்தின் குறியீட்டு எண் IN279 ஆகும்.[5] சரணாலயத்தின் சில பகுதிகள் 2022 முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளங்களாக நியமிக்கப்பட்டுள்ளன.[1][2]
சுசீந்திரம் தேரூர் வேம்பன்னூர் நீர்த்தட வளாகம் | |
---|---|
அமைவிடம் | தமிழ் நாடு |
ஆள்கூறுகள் | 8°10′45″N 77°27′45″E |
ஏரி வகை | உவர் நீர் |
வடிநிலப் பரப்பு | 3 km2 (0 sq mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 1.95 km (1.2 mi) |
அதிகபட்ச ஆழம் | 9 m (29.5 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 0 – 19 m (62.3 அடி) |
குடியேற்றங்கள் | நாகர்கோவில், தமிழ் நாடு |
அலுவல் பெயர் | வேம்பன்னூர் நீர்த்தட வளாகம் |
தெரியப்பட்டது | 8 ஏப்ரல் 2022 |
உசாவு எண் | 2474[1] |
அலுவல் பெயர் | சுசீந்திரம் தேரூர் நீர்த்தட வளாகம் |
தெரியப்பட்டது | 8 ஏப்ரல் 2022 |
உசாவு எண் | 2492[2] |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Suchindram_Theroor_Lake_Watchtower.jpg/640px-Suchindram_Theroor_Lake_Watchtower.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b1/Painted_Stork.jpg/640px-Painted_Stork.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/31/Nelumbo_nucifera1.jpg/640px-Nelumbo_nucifera1.jpg)