சுலைமான் மலைத்தொடர்
From Wikipedia, the free encyclopedia
சுலைமான் மலைத்தொடர் (ஆங்கிலம்: Sulaiman Mountains; பஷ்தூ: د كسي غرونه; பலூச்சி/உருது/பாரசீகம்: کوه سليمان அல்லது கோ-இ சுலைமான் Kōh-e Sulaymān), இந்து குஷ் மலை அமைப்புகளில் தெற்கில் நீண்டுள்ள இது, ஜாபுல் (Zabul), கந்தகார், மற்றும் ஆப்கானித்தான் பகுதியில் அமைந்துள்ள 'லொயா பாகிடா' (Loya Paktia), மற்றும் தெற்கு நடுவண் நிர்வாகத்தின் பழங்குடிப் பகுதிகளான தெற்கு வசீரிஸ்தான் மற்றும் அதன் எல்லைப் பகுதியிலுள்ள 'தேரா இசுமாயில் கான்' (Frontier Region Dera Ismail Khan), பலூசிஸ்தான் பெரும்பாலான பகுதியிலும், பஞ்சாப் மற்றும் பாக்கித்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் சில பகுதியிலும் இம்மலைத் தொடர் வியாபித்துள்ளது.[1] சுலைமான் மலைத்தொடர் ஈரானியப் பீடபூமியின் கிழக்கு விளிம்பில் இருந்து சிந்து ஆற்றுப் பகுதியில் இந்தியத் துணைக்கண்டம் பிரிகிறது. 6,000 மீட்டர் (20,000 அடி) உயரத்துக்கு நீண்டுள்ள இந்த மலைத்தொடரின் வடக்கேயுள்ள மத்திய இந்து குஷ் மலையின் வறண்ட உயர்நிலங்கள் இதன் எல்லையாக உள்ளன.[2]
சுலைமான் மலைத்தொடர் Sulaiman Range | |
---|---|
د كسي غرونه / کوه سليمان | |
சுலைமான் நெடுக்கத்தின் ஒரு பகுதியான செயற்கைக்கோள் படம். | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 3,487 m (11,440 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | ஜாபுல், கந்தகார் மற்றும் லொயா பாக்டியா, ஆப்கானித்தான் தெற்கு வசீரிஸ்தான், தேரா இசுமாயில் கான் எல்லைப் பகுதி, பலூசிஸ்தான், பஞ்சாப் மற்றும்வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பாக்கித்தான். |
மூலத் தொடர் | இந்து குஷ் |