செம்பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
செம்பட்டியல் அல்லது சிவப்புப் பட்டியல் (Red list) என்பது ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) என்ற அமைப்பு வெளியிடும் இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான பத்து நிலைகளாவன:[1][2][3]
தலைமையகம் | ஐக்கிய இராச்சியம் |
---|---|
சேவை பகுதி | சர்வதேசம் |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
தாய் அமைப்பு | பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் |
சார்புகள் | இனப் பாதுகாப்புச் சபை, சர்வதேச பறவைப் பாதுகாப்பு, இயற்கை உதவி, தாவரவியல் பூங்காக்களுக்கான பாதுகாப்பு நிறுவனம், றோயல் தாவரவியல் பூங்காக்கள், டெக்ஸாஸ் A&M பல்கலைக்கழகம், ரோம சேபியன்ஸா பல்கலைக்கழகம், லண்டன் விலங்கியல் சங்கம் |
வலைத்தளம் | http://www.iucnredlist.org |
சுருக்கம் | விரிவு | கலைச்சொல் |
---|---|---|
EX | Extinct | அழிந்து போனவை, அற்றுவிட்ட இனம் |
EW | Extinct in the Wild | இயலிடத்தில் அழிந்து போனவை, இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் |
CR | Critically endangered | அச்சுறுத்தலுக்கு உள்ளானவை அல்லது பேரிடரிலுள்ளவை, மிக அருகிய இனம் |
EN | Endangered | அருகிவருபவை, அருகிய இனம் |
VU | Vulnerable | பாதுகாப்பற்றவை. அழிவாய்ப்புள்ள உயிரினங்கள், அழிவாய்ப்பு இனம் |
NT | Near Threatened | அருகும் தருவாயில் உள்ளவை, அச்சுறு நிலையை அண்மித்த இனங்கள், அச்சுறு நிலையை அண்மித்த இனம் |
LC | Least Concern | அழிந்து விடும் என்ற அச்சுறுநிலையற்றவை தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் |
DD | Data Deficient | போதியளவு தரவுகள் பெறப்பட்டிருக்காத இனங்கள், தரவுகள் போதாது. |
NE | Not evaluated | மதிப்பீடு செய்யப்படாத இனம் |
1991ஆம் ஆண்டிலிருந்து பல பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன:[4][5]
2001 முதல் அனைத்து புதிய பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் மதிப்பீடுகளும் வகைகள் மற்றும் அளவுகோல் பதிப்பு 3.1ஐப் பயன்படுத்தியுள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.