சோடியம் நாப்தலீனைடு
From Wikipedia, the free encyclopedia
சோடியம் நாப்தலீனைடு (Sodium naphthalenide) என்பது C10H8Na என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் நாப்தலைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. கரிம உப்பான இச்சேர்மத்தின் அயனிக் கட்டமைப்பு Na+C10H8− என்று எழுதப்படுகிறது. ஆய்வகங்களில் கரிம, கரிமவுலோக, கனிம வேதியியல் பிரிவுகளில் ஓர் ஒடுக்கியாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு திண்மமாக இதை தனிமைப்படுத்த இயல்வதில்லை. ஆனால் வழக்கமாக பயன்படுத்துவதற்கு சற்று முன்பாக இச்சேர்மத்தை தயாரித்துக் கொள்வர்[1].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Sodium naphthalenide | |
முறையான ஐயூபிஏசி பெயர்
சோடியம் நாப்தலீன்-1-னைடு | |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 10004279 N |
EC number | 222-460-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11829632 |
| |
பண்புகள் | |
C10H8Na | |
வாய்ப்பாட்டு எடை | 151.16 g·mol−1 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் சைக்ளோபென்டாடையீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு