ஜிஞ்சாங்
From Wikipedia, the free encyclopedia
ஜிஞ்சாங், (மலாய்: Jinjang; ஆங்கிலம்: Jinjang; சீனம்: 增江玛珠); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரின் வட மேற்குப் பகுதியில், கெப்போங் தொகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப் பகுதி; மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஆகும்.[1]
விரைவான உண்மைகள் ஜிஞ்சாங் Jinjang, நாடு ...
ஜிஞ்சாங் Jinjang | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 3°12′43″N 101°39′27″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கோலாலம்பூர் |
புறநகர் | ஜிஞ்சாங் |
தொகுதி | கோலாலம்பூர் |
அரசு | |
• நகராண்மை | கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 52100 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-03 22 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | W ; V |
இணையதளம் | www |
மூடு
ஜே-நகரம் (J-Town) என்று அழைக்கப்படும் இந்த நகர்ப் பகுதி; முன்பு காலத்தில் சீனர்களின் குடியேற்றக் கிராமமாகத் (Chinese New Village) திகழ்ந்தது. 1960-ஆம் ஆண்டுகளில் குண்டர் கும்பல் செயல்பாடுகளுக்கு நன்கு அறியப்பட்ட இடமாகவும் இருந்தது.[2]
ஜிஞ்சாங் நகர்ப்புறம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் படுகிறது. ஒரு பிரிவு: வடக்கு ஜிஞ்சாங் (Jinjang Utara). மற்றொரு பிரிவு வடக்கு ஜிஞ்சாங் (Jinjang Selatan).[3]