ஜீனடின் ஜிதேன்
From Wikipedia, the free encyclopedia
ஜீனடின் யாசித் ஜிதேன் (பிறப்பு: 23 சூன் 1972) ஒரு பிரெஞ்சு கால்பந்து வீரர் ஆவார். பிரான்சு தேசிய அணிக்காக விளையாடிய இவர், 1998 காற்பந்து உலகக்கோப்பை மற்றும் 2000 ஐரோப்பிய கோப்பையை வென்ற அணிகளின் ஒரு அங்கமாக இருந்தார். 2006 உலகக் கோப்பை போட்டிகளில் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருதை வென்றார்.
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறப்புப் பெயர் | ஜீனடின் யாசித் ஜிதேன் | ||
பிறந்த நாள் | 23 சூன் 1972 (1972-06-23) (அகவை 51) | ||
பிறந்த இடம் | மர்சேய், பிரான்சு | ||
உயரம் | 1.85 மீ | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்களம் | ||
இளநிலை வாழ்வழி | |||
1982–1983 | செயிண்ட்-ஹென்றி | ||
1983–1987 | செப்டெமேஸ்-லெஸ்-வல்லோன்ஸ் | ||
1987–1988 | கேன்ஸ் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1988–1992 | கேன்ஸ் | 61 | (6) |
1992–1996 | போர்டோ | 139 | (28) |
1996–2001 | யுவென்டசு | 151 | (24) |
2001–2006 | ரியல் மாட்ரிட் | 155 | (37) |
மொத்தம் | 506 | (95) | |
பன்னாட்டு வாழ்வழி | |||
1994–2006 | பிரான்சு | 108 | (31) |
மேலாளர் வாழ்வழி | |||
2014–2016 | ரியல் மாட்ரிட் 'பி' | ||
2016–2018 | ரியல் மாட்ரிட் | ||
2019–2021 | ரியல் மாட்ரிட் | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
காற்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த நடுக்கள வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் ஜிதேன் ஒரு பாலோன் தி'ஓர் மற்றும் மூன்று பிபா ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளையும் வென்றுள்ளார். 2004 ஆம் ஆண்டில், பீலேவால் தொகுக்கப்பட்ட உலகின் சிறந்த வாழும் காற்பந்து வீரர்களின் பட்டியலில் இவர் பெயரிடப்பட்டார். அதே ஆண்டில் யூஈஎஃப்ஏ அமைப்பால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரராக ஜிதேன் பெயரிடப்பட்டார். காற்பந்து உலகக் கோப்பை, யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, மற்றும் பாலோன் தி'ஓர் ஆகியவற்றை வென்ற ஒன்பது காற்பந்து வீரர்களில் இவரும் ஒருவர்.
ஒரு வீரராக ஓய்வு பெற்ற பிறகு, ஜிதேன் ஒரு பயிற்சியாளாராக தன வாழ்க்கையை தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில் இவர் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை மேலாளாராகப் பொறுப்பேற்றார். இவர் தொடர்ந்து மூன்று முறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு கோப்பையை வென்ற முதல் பயிற்சியாளாராக ஆனார். ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளாராக இவர் ஒரு யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை, இரண்டு பிபா கழக உலகக் கோப்பை மற்றும் இரண்டு லா லீகா பட்டங்களை வென்றார். 2017 இல் சிறந்த ஆடவர் பயிற்சியாளராக பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு இவரை தேர்ந்தெடுத்தது.