தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2006 / From Wikipedia, the free encyclopedia
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழகசட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் பெரும் கட்சிகளோடு கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் ஒரிரு தொகுதியில் தனது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனிபெரும்பான்மையோடு தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். எதிர்கட்சியான மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களைக் கைப்பற்றி தமிழக தேர்தல் வரலாற்றிலேயே அதிகமான தொகுதிகளை கைப்பற்றி கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்து பலமான எதிர்கட்சியாக செயல்பட்டது. திமுக தலைமையிலான ஐமுகூ கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றியது. முஸ்லிம் லீக் 1 இடத்தையும் கைப்பற்றியது.[3][4][5][6]விஜயகாந்தின்தேமுதிக தலைமையில் மதிமுக தலைவர் வைகோ உருவாக்கிய மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் தனித்து போட்டியிட்ட ராமதாஸ் அவர்களின் பாமக, சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி மற்றும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேஜகூ போட்டியிட்ட கட்சிகள் எத்தொகுதியையும் கைப்பற்றவில்லை. வாக்குகள் எண்ணும் பணி 2016 மே 19 அன்று நடைபெற்றது.
விரைவான உண்மைகள் தமிழ்நாடு சட்டமன்றத்தின் அனைத்து 232 இடங்கள் (இரு இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது), First party ...