தாரசு மலைத்தொடர்
தெற்கு துருக்கியில் அமைந்துள்ள மலைத்தொடர் / From Wikipedia, the free encyclopedia
தாரசு மலைகள் அல்லது டாரஸ் மலைத்தொடர் (ஆங்கிலம்: Taurus Mountains; துருக்கி: Toros Dağları; பண்டைக் கிரேக்கம்: Ὄρη Ταύρου), ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ள தெற்கு துருக்கியில் உள்ள ஒரு சிக்கல் மிகுந்த மலைத்தொடரான இது, மேற்கு ஆசிய தென் துருக்கியின் மத்தியதரைக் கடலோரப் பிளவு பகுதியிலிருந்து, 'அனத்தோலியா' என்று அழைக்கப்படும் அனத்தோலியா பீடபூமியின் தெற்குத் தென்கிழக்கு வரை வியாபித்துள்ளது.[1] மேலும், ஆடாலியா (Adalia) வளைகுடாவிலிருந்து, மத்தியதரைக் கடல் எனப்படும் நடுநிலக் கடலில் பாயக்கூடிய, துருக்கியின் மிக நீளமான ஆறான சேகான் ஆற்றின் (Seyhan River) வடிநிலம் வரை வளர்ந்துள்ள இம்மலைத் தொடர், வடகிழக்கில் இதன் தொடர்ச்சியாகச் செல்லும் எதிர் மலைத்தொடர் எனப்படும், இந்த மலைத்தொடரில், 11,000 அடிக்கும் மேற்பட்ட உயரமான பல உச்சி முகடுகள் இருக்கின்றன.[2] யுரேசிய அல்பிட் நிலப் பட்டையில் (Alpide belt in Eurasia) அமைந்துள்ள டாரஸ் மலைத்தொடர், கிழக்கில் எகிர்திர் ஏரியில் (Lake Eğirdir) வளைந்து பரவியுள்ளது. மேலும், மேற்கின் மேல்பகுதியில், புறாத்து ஆறு, மற்றும் தைகிறிசு ஆறு போன்ற ஆறுகள் இம்மலையின் ஊடாக பாய்கிறது.[3]
தாரசு மலைத்தொடர் Taurus Mountains | |
---|---|
தேமிர்கழிக் நிக்டே மாகாணம் | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | 3,756m |
உயரம் | 3,756 m (12,323 அடி) |
பட்டியல்கள் | |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | டோரோஸ் டக்லரி Error {{native name checker}}: parameter value is malformed (help) |
புவியியல் | |
நாடு | துருக்கி |