தாரிம் வடிநிலம்
From Wikipedia, the free encyclopedia
தாரிம் வடிநிலம் (Tarim Basin), மேற்கு சீனாவின் சிஞ்சியாங் தன்னாட்சிப் பகுதியில் அமைந்த தாரீம் ஆற்றின் வடிநிலப் பகுதிகள் ஆகும். இந்த வடிநிலத்தின் பரப்பளவு 1,020,000 km2 (390,000 sq mi) ஆகும்.[1] தாரிம் வடிநிலத்தின் வடக்கில் தியான் சான் மலைத்தொடர்களும், தெற்கில் திபெத்திய பீடபூமியை ஒட்டிய குன்லுன் மலைத்தொடர்களும் சூழ்ந்துள்ளது. தாரிம் வடிநிலத்தின் பெரும்பகுதிகளை தக்கிலமாக்கான் பாலைவனம் கொண்டுள்ளது.
தாரிம் வடிநிலம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
துசுங்கரியா தாரிம் வடிநிலம் | |||||||||
சீனப் பெயர் | |||||||||
சீனம் | 塔里木盆地 | ||||||||
| |||||||||
Nanjiang | |||||||||
சீனம் | 南疆 | ||||||||
Literal meaning | தெற்கு சிஞ்சியாங் | ||||||||
| |||||||||
Uyghur name | |||||||||
Uyghur | تارىم ئويمانلىقى |
சிஞ்சியாங் மாகாணம் மூன்று முக்கிய வேறுபட்ட புவியியல், வரலாறு மற்றும் இனக்குழுக்களை அடங்கிய பிரதேசங்களைக் கொண்டுள்ளது. 1884-இல் சீனாவின் குயிங் அரச மரபு சிஞ்சியாங் மற்றும் துங்காரியா பிரதேசங்களை அரசியல் ரீதியாக சிஞ்சியாங் மாகாணம் என ஒன்றிணைத்தனர். துங்கர் மக்கள், தரிம் வடிநிலத்தில் அல்சகர் மக்கள், பாலைவனச் சோலைகளில் வாழும் துருக்கிய மொழி பேசும் முஸ்லீம் மக்களை, தற்போது சீன அரசு உய்குர் மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பகுதியில் திபெத்திய பௌத்தர்களும் வாழ்கின்றனர்.