தா நாங்
From Wikipedia, the free encyclopedia
தா நாங் (Đà Nẵng, 城舖沱灢, listenⓘ) என்பது வியட்நாமின் பிரதான துறைமுக நகரங்களில் ஒன்றாகும் (மற்றவை ஹோ சி மின் நகரம் மற்றும் கைபோங்). இதுவே வியட்நாமின் தென் மத்திய கோஸ்ட்டின் மிகப்பெரிய நகரமாகும். தா நாங் தென் கடலின் கரையோரமாகவும் ஹான் ஆற்றின் தொடக்க எல்லையிலும் அமைந்துள்ளது. மத்திய வியட்நாமின் வணிக மற்றும் கல்வியின் மத்திய நிலையமாக இது விளங்குகிறது. தா நாங் நிலையான இலகுவாக அணுகக்கூடிய வகையில் ஒரு துறைமுகத்தையும் கொண்டுள்ளது. இது தேசிய வழி 1Aயிலும் மற்றும் வடக்கு-கிழக்கு ரயில்வேயிலும் அமைந்துள்ளமையால் இதை போக்குவரத்தின் மையமாக கொண்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களம் போன்றவற்றிற்கு 100 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்நகரம் முற்காலத்தில் டை வியாட் குடியேற்றத்தின் போது குவா கான் (Cửa Hàn) என அழைக்கப்பட்டது. பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் போது டூரன் மற்றும் டுரோன் (Tourane அல்லது Turon) என்றும் அழைக்கப்பட்டது. தா நாங்கே வியட்நாமின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார மையமாகும் (ஹோ சி மின் நகரம் மற்றும் ஹனோய்க்கு அடுத்ததாக).
தா நாங்
Đà Nẵng | |
---|---|
நகராட்சி | |
Thành phố Đà Nẵng | |
transcription(s) | |
• Chữ Nôm | 城舖沱灢 |
• Quốc ngữ | thành phố Đà Nẵng |
நாடு | வியட்நாம் |
பிரதேசம் | தென் மத்திய கோஸ்ட் |
தெனொயிம் | Dananger |
அரசு | |
• Party's Secretary (Bí thư Thành ủy) | Trần Thọ |
• People's Council's President (Chủ tịch Hội đồng Nhân Dân) | Nguyễn Bá Thanh |
• People's Committee's President (Chủ tịch Ủy ban Nhân Dân) | Văn Hữu Chiến |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,285.4 km2 (496.3 sq mi) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 10,07,400 |
• அடர்த்தி | 780/km2 (2,000/sq mi) |
• Ethnicities | கின்ஹ் கோ து தே |
நேர வலயம் | ஒசநே+07:00 (Indochina Time) |
• கோடை (பசேநே) | ஒசநே+7 (No DST) |
Area code | 511 |
இணையதளம் | danang.gov.vn |
1997ற்கு முன்னர் இந்நகரம் குவாங் நாம்-டா நாங் மாகாணத்தின் பகுதியாக இருந்தது. 1 சனவரியில் 1997ல் தா நாங் குவாங் நாம் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டு வியட்நாமின் ஐந்து சுதந்திர நகராட்சிகளில் ஒன்றாக மாறியது. தா நாங் முதல் தர நகரங்களில் ஒன்றாக பட்டியல் இடப்பட்டுள்ளது.[2] வியட்நாமின் மாகாணங்கள் மற்றும் மத்திய ஆட்சி நகரங்களை விட நகரமயமாக்கல் விகிதத்தில் தா நாங் முன்னிடத்தில் உள்ளது.[3] தா நாங்கே வியட்நாமின் ஐந்தாவது மிகப்பெரிய நகரமாகும்.[4]