திஜிமோன் கவுன்சோ
பெனின்-அமெரிக்க நடிகர் / From Wikipedia, the free encyclopedia
திஜிமோன் காஸ்டன் கவுன்சோ[1] (ஆங்கில மொழி: Djimon Gaston Hounsou) (பிறப்பு: 24 ஏப்ரல் 1964)[2] என்பவர் பெனின்-அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். இவர் தனது திரைப்பயணத்தை இசை காணொளி மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து வித்தவுட் யு ஐ ஆம் நொதிங் (1990), அமிஸ்டாட் (1997), கிளாடியேட்டர் (2000), இன் அமெரிக்கா (2002), பிளட் டைமன்ட் (2006), பியூரியஸ் 7 (2015)[3] போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் திஜிமோன் கவுன்சோ, பிறப்பு ...
திஜிமோன் கவுன்சோ | |
---|---|
பிறப்பு | திஜிமோன் காஸ்டன் கவுன்சோ 24 ஏப்ரல் 1964 (1964-04-24) (அகவை 60) கொட்டொனௌ, பெனின் |
பணி | நடிகர், வடிவழகர் |
செயற்பாட்டுக் காலம் | 1986–இன்று வரை |
துணைவர் | கிமோரா லீ சிம்மன்ஸ் (2007–2012) |
பிள்ளைகள் | 1 |
மூடு
இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014)[4][5] மற்றும் கேப்டன் மார்வெல் (2019) போன்ற திரைப்படங்களிலும் சமுத்திரப்புத்திரன் (2018) மற்றும் ஷசாம்! (2019) போன்ற டிசி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[6][7]