துளுவம்
இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிகளில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
துளு அல்லது துளுவம் ஒரு தமிழ் குடும்ப கிளை மொழியாகும். இதனை தற்போது இரண்டு மில்லியனுக்கும் சற்று குறைவான மக்கள் பேசுகின்றனர். இது பெரும்பாலும் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களிலும் கேரளம் மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்திலும் பேசப்படுகிறது.
விரைவான உண்மைகள் துளுவம், நாடு(கள்) ...
துளுவம் | |
---|---|
துளு | |
ತುಳು, തുളു | |
துளு எழுத்தில் எழுதப்பட்ட துளு பேஸ் | |
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | துளு நாடு[lower-alpha 1][1][2][3] |
இனம் | துளுவா மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,841,963[4] (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) |
திராவிடம்
| |
திகளாரி எழுத்துமுறை கன்னட எழுத்துமுறை மலையாள எழுத்துமுறை | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | tcy |
மொழிக் குறிப்பு | tulu1258[5] |
இந்தியாவில் துளு மொழி பேசப்படும் பகுதிகள் |
மூடு
இம்மொழிக்கு எழுத்துரு (வரிவடிவம்) இல்லாதிருந்தது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் எழுத்துரு (வரிவடிவம்) அமைக்கப்பட்டது. இவ் எழுத்துரு (வரிவடிவம்) மலையாளத்தை ஒத்திருந்தாலும் தற்காலத்தில் கன்னட மொழியின் வரிவடிவமே பயன்படுத்தப்படுகிறது.