நசீம் பானு
இந்தி திரைப்பட நடிகை / From Wikipedia, the free encyclopedia
நசீம் பானு (Naseem Banu) (பிறப்பு: 1916 சூ 4 - 2013; இறப்பு: 2002 சூன் 18 ) இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் நசீம் என்றும், "பியூட்டி குயின்" என்றும், இந்தியத் திரைப்படயுலகின் "முதல் பெண் உச்சநட்சத்திரம்" என்றும் அழைக்கப்பட்டார். 1930களின் நடுப்பகுதியில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 1950களின் நடுப்பகுதி வரை தொடர்ந்து நடித்திருந்தார். இவரது முதல் படம் சோன்ராப் மோடியுடன் கூன் கா கூன் (ஹேம்லெட்) (1935), அதன் மினெர்வா மூவிடோன் பேனரின் கீழ் இவர் பல ஆண்டுகளாக நடித்து வந்தார். மோடியின் புக்கார் (1939) படத்துடன் இவரது நடிப்பு உச்சத்தை வந்தது. அதில் இவர் பேரரசி நூர் ஜஹான் வேடத்தில் நடித்திருந்தார். [1] இவர் பிரபல நடிகை சாய்ரா பானுவின் தாயும், பிரபல நடிகர் திலீப் குமாருக்கு மாமியாரும் ஆவார்.
விரைவான உண்மைகள் நசீம் பானு, பிறப்பு ...
நசீம் பானு | |
---|---|
புக்கார் திரைப்படத்தில் 1939 | |
பிறப்பு | ரோஷன் அரா பேகம் (1916-07-04)4 சூலை 1916 தில்லி, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 18 சூன் 2002(2002-06-18) (அகவை 85) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1935–1957 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | புக்கார் 1939 |
வாழ்க்கைத் துணை | எஹ்சன்-உல்-ஹக் |
பிள்ளைகள் | சாய்ரா பானு (மகள்) சுல்தான் அகமது (மகன்) |
மூடு