நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி (Nagapattinam Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 29வது தொகுதி ஆகும். ஆரம்ப காலத்தில் இந்தத் தொகுதி இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்தது, பின்பு ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் பெற்றது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957-நடப்பு |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 982,352 |
சட்டமன்றத் தொகுதிகள் | 169. நன்னிலம் 168. திருவாரூர் 163. நாகப்பட்டினம் 165. வேதாரண்யம் 166. திருத்துறைப்பூண்டி (தனி) 164. கீழ்வேளூர் (தனி) |
மூடு